நடிகர் விஜய்யின் உறவினரும், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமானவரித்துறை சோதனை. அவரது வீடு மட்டுமில்லாமல் அவருக்கு சொந்தமான இடங்களிலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. 


கெர்ரி இண்டல் என்ற சரக்கு ஏற்றுமதி கையாளும் நிறுவனத்தைஅவர் நடத்தி வருகிறார். மேலும் பல நிறுவனங்களும் அவருக்கு சொந்தம். சென்னை அடையாற்றில் உள்ள சேவியர் ப்ரிட்டோ வீட்டில் தற்போது ரெய்டு நடந்து வருகிறது. பாக்ஸான் வளாகத்தில் செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் ரெய்டு தொடர்ச்சியாக, சேவியர் ப்ரிட்டோ வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. 


சீன நிறுவனமான ஷாவ்மி மற்றும் ஓப்போ நிறுவனங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் கடந்த இரு நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. ஷாவ்மி நிறுவனத்தை சேவியர் ப்ரிட்டோவும் கையாளுவதால் அவர் மீதும் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது.  பொதுவாக விஜய் மீது ரெய்டு நடத்தப்படுவதை வழக்கமாக பார்த்த நமக்கு, முதன்முறையாக அவரது தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவது புதிதாக உள்ளது. 


 






சேவியர் பிரிட்டோவின் XB ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் விஜய் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றியை பெற்ற 'மாஸ்டர்' திரைப்படத்தை தயாரித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, இந்த படம் தயாரிக்க தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று தெரிவித்திருந்தார். 


மேலும், சேவியர் பிரிட்டோ நடிகர் விஜய்யின் பினாமி என்றும், சேவியர் பிரிட்டோ மூலம் தான் நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை தயாரித்து வருகிறார் என்ற செய்தியும் பரவியது. இதையடுத்து, விளக்கமளித்த படக்குழு இது போன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தது. 


தொடர்ந்து, ஜோசப் விஜய்யின் நெருங்கிய கூட்டாளிகளான லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாக இணைவார்கள் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாக, அடுத்த சில நாட்களில் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக தமிழ் நடிகர் விஜய் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 






இதையறிந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நெய்வேலி படப்பிடிப்பு தளத்தில் குவிய, வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 132 இன் கீழ் தான் விஜய்யின் வீட்டில் சோதனை நடந்தாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். 


இந்த சோதனையின்போது, மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். அப்போழுது விளக்கமளித்த அவர், நடந்துகொண்டிருந்த சோதனைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, நான் மாஸ்டர் திரைப்படத்திற்கு மட்டும் தயாரிப்பாளராக இருக்கிறேன் என்று எழுத்துபூர்வமாக விளக்கமளித்தார். 


தொடர்ந்து, ஃபுட்சல் காரணமாக சேவியர் பிரிட்டோ மிகப்பெரிய இழப்பை சந்தித்தாகவும், இவர் நடிகர் ஜோசப் விஜய்யின் ‘பினாமி’ இல்லை என்றால், ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரிக்க சேவியர் பிரிட்டோவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்ற கேள்வியும் அப்பொழுது முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


‛ஆசிர்வாதம் பண்ணுங்க ஆண்ட்டி...’ -பாட்டிக்கு ‛பாயாசம்’ போட்டு நகையை லபக்கிய பாசக்கார பெண் கைது!


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


‛ஆனாலும் இவ்வளவு ஸ்ட்ரிக்ட் கூடாது’ தென் கொரியா பட சி.டிக்கள் விற்பனை: 7 பேரை சுட்டுக்கொன்ற வட கொரியா!


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண