மெக்சிகோ நாட்டில் தொங்கு பாலம் ஒன்று திறந்து வைக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இடிந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீரமைக்கப்பட்ட தொங்கு பாலம்
மெக்சிகோ நாட்டின் தெற்கே அமைந்துள்ள குர்னவாகா நகரில் மறுசீரமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஒன்றை அந்நகரின் மேயர் ஜோஸ் லூயிஸ் முன்னதாகத் திறந்துவைத்தார். மறுசீரமைக்கப்பட்ட இந்தத் தொங்கு பாலம், மரப் பலகைகள் மற்றும் உலோகங்களால் செய்யப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: Prophet Mohammad Row :முகமது நபி குறித்த சர்ச்சை பேச்சு.. இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்கும் அரபு நிறுவனங்கள்.. முழு விவரம்
இந்நிலையில், பாலத்தை திறந்து வைத்து மேயர், அவரது குடும்பத்தார், அரசு அதிகாரிகள் மற்றும் அங்கிருந்த மக்கள் உள்பட பலருடன் இந்தப் பாலத்தின் மேல் நடந்து சென்ற நிலையில், எதிர்பாராதவிதமாக திடீரென பாலம் அறுந்து விழுந்தது.
இதில் மேயர் அவரது மனைவி, அதிகாரிகள் உள்பட பலரும் சுமார் 10 அடி உயரத்திலிருந்து கீழேயிருந்த பாறைகள் மீதும், ஓடையின் மீதும் விழுந்தனர். இதில் மேயர் ஜோஸ் லூயிஸுக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிக பளு காரணமாக இந்தத் தொங்கு பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் படிக்க: Ukraine : போர்முனையில் படைவீரர்களை சந்தித்த உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி.. போருக்கு என்று முடிவு? என்ன நடக்கிறது?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்