இந்தியா கண்டனம்:
முகமது நபிகள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு கருத்து தெரிவித்திருந்தது. அதில் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் கருத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும்:
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை மீறும் பாகிஸ்தான், இந்திய சிறுபான்மையினர் குறித்து கருத்து தெரிவிப்பது அபத்தமாக உள்ளது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு மீது பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இந்தியாவில் உள்ள மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியை தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மரியாதை:
இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களுக்கும், இந்திய அரசு அதிகபட்ச மரியாதையை அரசு அளித்து வருகிறது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
முகமது நபிகள் குறித்த சர்ச்சை:
முகமது நபிகள் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பாஜக செய்தி தொடர்பாளர்கள் நூபர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அரபு நாடுகள் இவ்விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பாஜக பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இருவரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவ்விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்