உலகம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்கள் தற்போது வித்தியாசமான காட்சிகளை படம்பிடித்து தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஒருவர் மலை சிங்கத்தை நேருக்கு நேர் சந்திந்து, அந்த சிங்கத்திடம் இருந்து உயிருக்கு பயந்து ஓடிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


அந்த வீடியோவில் மலை ஏறும் ஒருவர் சில மலைத்தொடர்களில் உள்ள வறண்ட காடுகளை காண்பிப்பதன் மூலம் வீடியோ தொடங்குகிறது. தீடிரென அந்த நபர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஓட ஆரம்பிக்கிறார். கேமரா பின்னோக்கி திரும்பியதும், ஒரு மலை சிங்கம் அவரைத் துரத்துவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இருப்பினும், மலையேறுபவர் கடைசி நேரத்தில் தன் உயிரை காப்பற்றிகொள்ள சிங்கத்தை நோக்கி குரல் எழுப்புகிறார். 



இதைபார்த்து பயந்துபோன சிங்கம் அங்கிருந்து ஓடுகிறது. 2022 ம் ஆண்டு ஜனவரி 8 ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த சம்பவம் நடந்ததுள்ளது. வைரல்ஹாக் என்ற சேனலில் உள்ள வீடியோவில், "என்னை ஒரு மலை சிங்கம் துரத்தியது, அதனால் நான் ஓடி வந்து கடைசி நிமிடத்தில் கர்ஜனையுடன் அதை விரட்டினேன் என்று பதிவிட்டுள்ளார்.



மேலும் படிக்க : Madan Gowri | முதல்ல நண்பர்கள்.. அப்புறம் காதல்.. ப்ரேக்-அப்.. கல்யாண சேதி சொன்ன மதன் கெளரி...


இந்த வீடியோவை இதுவரை யூடியூப்பில் 1,900 முறை லைக் செய்யப்பட்டு 3.2 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.சிங்கத்திடம் இருந்து அந்த நபர் தவித்தது குறித்து பார்வையாளர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல், பலரும் ஒரு விலங்கு உங்களை துரத்தும்போது அதை தாக்காமல் அதை நோக்கி குரல் எழுப்பினாலே பயந்து ஓடிவிடும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Siddharth Controversy | "என் மகள் இந்தியாவுக்காக மெடல்களை குவிச்சாங்க.. அவர் என்ன பண்ணார்?” - விளாசிய சாய்னா நேவாலின் தந்தை


Watch Video | இப்படி பண்ணுங்க பாக்கலாம் - ரசிகர்களுக்கு சேலஞ்ச் கொடுத்த சமந்தா!


Hindi Words in Pongal Gift: பொங்கல் தொகுப்பில் இந்தியை திணிக்கிறதா திமுக..? - அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பும் ஓபிஎஸ்.