சாய்னா நேவாலை தரைகுறைவாக ட்வீட் செய்ததாக கூறி நடிகர் சித்தார்த்தை சாய்னா நேவாலின் தந்தை கடுமையாக சாடியுள்ளார். தமிழ் நடிரான சித்தார்த்தை விமர்சித்த சாய்னாவின் தந்தை, சித்தார்த் நாட்டுக்காக என்ன செய்தார்? என கேள்வி எழுப்பி உள்ளார்.


பிரபலமான தமிழ் நடிகர் சித்தார்த், இந்திய பேட்மிண்டன் விராங்கனை சாய்னா நேவாலுக்காக இட்ட டிவிட் தற்போது சர்ச்சை ஆகியுள்ளது. இந்நிலையில், சாய்னாவின் தந்தையும் நடிகரை சித்தர்த்தை தாக்கிய பேசியுள்ளார்.


ஹர்விர் சிங் நேவால் (சாய்னாவின் தந்தை) பேட்மிண்டன் மைதானத்தில் சாய்னா இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றுள்ள நிலையில், அந்த நடிகரின் நாட்டிற்கு என்ன பங்களிப்பு செய்தார் என்று ஹர்வீர் சிங் கேள்வி எழுப்பினார்.


“என் மகளுக்கு எதிராக இது போன்ற வார்த்தைகளைப் படித்த பின் மிகவும் மோசமாக உணர்ந்தேன்.  சித்தார்த் நாட்டுக்கு என்ன செய்தார்?  என் மகள் பதக்கங்களை வென்றுள்ளார், இந்தியாவிற்கு விருதுகளை கொண்டு வந்துள்ளார். இந்தியா ஒரு சிறந்த சமூகம் என்று நான் எப்போதும் நம்புகிறேன், மேலும் சாய்னாவுக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் விளையாட்டில் சக நட்புகள் என பலர் உள்ளனர். ஒரு விளையாட்டு வீரர் எவ்வளவு போராடுகிறார் என்பது அவர்களுக்கு தெரியும்” என சாய்னவின் தந்தை தெரிவித்துளளார்.


தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும், சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். தேசிய மகளிர் ஆணையத்தின் அழைப்பை ஏற்ற சாய்னாவின் தந்தை, ”மன்னிப்பு கேட்பதுதான் சித்தார்த் செய்யவேண்டிய அடிப்படை விஷயமாகும்.  அந்த நடிகரை எனக்குத் தெரியாது. நேற்றுதான் அவரைப் பற்றி முதல் முறையாகக் கேள்விப்பட்டேன்” என்றும் அவரது தந்தை கூறினார்,


நாட்டின் பிரதமர் எவ்வளவு பாதுகாப்புக்குள் உள்ளார்? என்று கேள்வி எழுப்பிய சாய்னாவின் ட்வீட் குறித்து சித்தார்த் விமர்சித்ததால் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.  பிரதமர் மோடி சமீபத்தில் பஞ்சாப் சென்றபோது பாதுகாப்பு குறைபாடு குறித்து புகார் கூறிய விதத்தில் சாய்னாவின் ட்வீட் இருந்தது.


முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூட சாய்னாவை ஆதரித்து, ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்பதைத் தவிர 'உறுதியான தேசபக்தர்' என்று கூறியுள்ளார். "இந்தியாவை ஒரு விளையாட்டு சக்தியாக மாற்றியதில் சாய்னாவின் பங்களிப்புகளுக்காக இந்தியா பெருமை கொள்கிறது. அவர் ஒரு ஒலிம்பிக் பதக்கம் வென்றவர், மேலும் உறுதியான தேசபக்தர். அவர் குறித்து இழிவான கருத்து தெரிவிப்பது ஒரு நபரின் இழிவான மனநிலையை காட்டுகிறது," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.


சாய்னா, “சித்தார்த்தை ஒரு நடிகராக விரும்புவதாகவும், ஆனால் அவர் தனது கருத்தை சிறந்த வார்த்தைகளை கொண்டு வெளிப்படுத்தி இருக்கலாம்” என்றும் கூறியுள்ளார்.