பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வதே ஒரு அழகான விஷயம் தான். ஆண் என்றால் இந்தப்பெயர், பெண் என்றால் இந்தப்பெயர் என பெயரை தேர்வு செய்வார்கள். நியூமராலஜி, பிடித்தவர்களின் பெயர்கள், குடும்பப் பெயர், தாய்மொழி பெயர், ஸ்டைலான பெயர் என பெயர்களுக்கான காரணங்களும் அதிகம். ஆனால் இந்தோனேசியாவில் தான் செய்யும் வேலை மீது அதீத பற்று கொண்ட ஒருவர் அது தொடர்பான பெயரை தன் மகனுக்கு வைத்து ஆச்சரியம் அளித்துள்ளார்.


இந்தோனேசியாவைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகனுக்கு 'Department Of Statistical Communication' என பெயர் வைத்துள்ளார். இதற்கு தமிழில் புள்ளியியல் தொடர்பு துறை என்று அர்த்தம். அங்குள்ள மொழிப்படி இது 'Dinas Komunikasi Informatika Statistik' என்று அழைக்கப்படுகிறது.


தோழி இல்லையே மொமெண்ட்... பெண் ரோபோவை கரம்பிடிக்க இருக்கும் நபர்..காதலுக்கு இனி உயிரும் வேண்டாமா?




ஏதோ கல்லூரி கட்டடத்துக்கு வைக்கப்பட்ட பெயர் போல தன் மகனுக்கு இந்தப் பெயரை சூட்டியுள்ளார் அந்த தந்தை.  தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் போதே ஒருவேளை மகன் பிறந்தால் நான் தான் பெயர் வைப்பேன். நீ ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதற்கும் மனைவி தலையாட்டியுள்ளார். அவர் நினைத்தது போலவே மகன் பிறந்த நிலையில் இந்த அதிசய பெயரை சூட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளார் அந்த தந்தை. உறுதி அளித்துவிட்டோமே என்று அவரின் மனைவியும் இந்த பெயருக்கு ஒகே சொல்லிவிட்டாராம். ஆனாலும் இந்த பெயரை சொல்லி அழைப்பதற்கும் பகல் இரவாகி விடும் என்பதால் 'Dinas Komunikasi Informatika Statistik'என்ற பெயரை சுருக்கு Dinko என அழைக்கின்றார்களாம் உறவினர்கள்.


இது குறித்து பேசிய அந்த தந்தை, ''10 வருடங்களுக்கு மேலாக நான் இந்த துறையில் பணியாற்றுகிறேன். அதனால் இந்தப்பெயரை சூட்டினேன். முதலில் சற்று கடினமாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. போகப்போக பழகிவிட்டது" என்றார். இந்தப்பெயரை அரசு முறையாக பதிவு செய்ய அனுமதி வழங்குமா அல்லது அதில் ஏதேனும் சிக்கல் வருமா என்ற குழப்பத்தில் இப்போது 'Dinas Komunikasi Informatika Statistikவின் தந்தை இருக்கிறார்.


மேலும் படிக்க: Crude Oil Prices: ஷாக் கொடுக்க தயாராகிறதா கச்சா எண்ணெய் விலை? என்ன நடக்கிறது சந்தையில்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண