சமீப காலமாகவே சோஷியல் மீடியாவில் வைரலாக இருந்து வருகிறார் நடிகை சமந்தா. கோலிவுட், டோலிவுட் பிஸியாக நடித்து வரும் நடிகை அண்மையில்தான் தனது காதல் கணவரை பிரிந்தார். அதன் பிறகு புத்துணர்வு பெற்றவர் போல தன்னை மிகுந்த பாசிட்டிவ் மனுஷியாக மாற்றிக்கொண்டுள்ளார். தனது நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடும் சமந்தா, அண்மையில் தனது தோழிகளிடன் கோவா சென்றிருந்தார்.

Continues below advertisement


அப்போது நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , பகிர அது வைரலானது.  இந்த நிலையில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் அவ்வப்போது ஷேர் செய்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் உடற்பயிற்சி உபகரணங்கள் ஏதுமின்றி உடற்பயிற்சி என்ற சேலஞ்சை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், என்னுடைய ஜிம் ட்ரெய்னர் என்னிடம் சேலஞ்ச் செய்தார். நான் உங்களுக்கு சேலஞ்ச் செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.






ஏற்கனவே சமந்தா மெலிந்துவிட்டதாக கிசுகிசுக்கும் அவரது ரசிகர்கள், இன்னுமா உடல் எடையை குறைக்க போகிறீர்கள் என குமுறுகின்றனர். சமீப காலமாக உடல் எடையை குறைப்பதில் ஆர்வம் காட்டுகிறார் சமந்தா , காரணம் அவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதுதான் என கூறப்படுகிறது. பாலிவுட், ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற வேண்டும் என்றுதான் அவர் முயற்சி எடுத்து வருகிறாராம். 






 


ஹாலிவுட் இயக்குனர் பிலிப்ஜான் என்பவரின் இயக்கத்தில் உருவாக உள்ள வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தாவும் தனது சமூக வலைத்தள பக்கங்களின் ஷேர் செய்திருந்தார்.  இந்த வெப்தொடரை தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஓ பேபி’ என்ற படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.