ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை அரசு  நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதி பாலன் உத்தரவிட்டார். 


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 9-ஆம் தேதி அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் மீது இன்று மூன்று பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து மீனவர்கள் 15 பேரும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகிராகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திருப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த கிரீம்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 9-ஆம் தேதி கிறிஸ்து (40), ஆரோக்கிய ராஜ்(45), ஆரோக்கியம் (38), ஜெர்மஸ்(33), ரமேஷ் (25),  பிரபு(36), ஜெகன்(40), மெல்டன்(45) ஆகிய 8 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதேபோல் ராமேஸ்வரத்தை சேர்ந்த பாலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரியன் ரோஸ்(44), அந்தோணி(45), கார்ச்(30), பிரதீபன்(35), ஈசாக்(25), ஜான்(30), ஜனகர்(32) ஆகிய 7 மீனவர்களும் அதே நாளில் கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் எல்லைதாண்டி வந்ததாக கூறி அந்த 15 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். மீனவர்கள் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அரசு முறை பயணமாக இந்தியா வரும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயுடன் மீனவர் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென தமிழக முதலமைச்சர்கோரிக்கை விடுத்திருந்தார். இன்று காலை டெல்லி வந்த இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க, 


CM Stalin EXCLUSIVE Interview: ஏபிபி நாடுவுடன் முதல்வர் ஸ்டாலின்! பூரண மதுவிலக்கு முதல் வாரிசின் வளர்ச்சிவரை.. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்! மெகா எக்ஸ்குளூசிவ்


Kolai Review: வித்தியாசமான மேக்கிங்... துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி ஈர்த்தாரா... ‘கொலை’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!


Aneethi Review: பதைபதைக்க வைக்கும் காட்சிகள்... வசந்தபாலனின் அநீதி படம் சூப்பரா? ..சுமாரா? - முழு விமர்சனம் இதோ..!