அமெரிக்காவின் நெவாடாவில் மூளையை உண்ணும் அரிய வகை அமீபாவால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தை கடந்த ஜூலை 19-ஆம் தேதி உயிரிழந்தது. 


அமிபா தாக்கத்தால் உயிரிழந்த குழந்தையின் தாய் பிரியானா,  சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தன் பேஸ்புக் பதிவில், உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது குழந்தையை நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைத்துச் சென்றபோது இனி காப்பாற்ற முடியாது எனக் கூறி சிகிச்சையளிக்க மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து சுகாதார நிறுவனம் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. 


உயிரிழந்த குழந்தையின் தாயார் தனது குழந்தையின் உயிரிழப்பு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “ வுட்ரோ டர்னர் பண்டி, அதிகாலை 2:56 மணிக்கு சொர்க்கத்தில் உள்ள எங்கள் தந்தையிடம்  சென்றான். அவன் 7 நாட்கள் போராடினான். இந்த உலகிலேயே வலிமையான மகன் எனக்கு இருந்தான். அவன் என் ஹீரோ. பூமியில் எனக்கு சிறந்த ஆண் குழந்தையை கொடுத்ததற்காக நான் கடவுளுக்கு என்றென்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன். ஒரு நாள் அவனை சொர்க்கத்தில் சந்திப்பேன்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


பண்டி குடும்பத்தின் நண்பர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவின்படி, கடந்த வாரம் குழந்தைக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்ட போது, பெற்றோர் ஆரம்பத்திலேயே குழந்தைக்கு ஏதோ பிரச்சனை இருப்பதாக உணர்ந்தனர். உடனடியாக தன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான. மருத்துவ ஊழியர்கள் முதலில் குழந்தை மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக நினைத்தனர். பின்னர் இந்த ஆண்டின் தொடத்தில் பரவலாக ஏராளமானோரை பாதித்த, மூளையை உண்ணும் கொடிய அமீபா அக்குழந்தையை பாதித்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். 


Naegleria fowleri என்பது ஒருவகை அரிய அமீபா. இது ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நன்னீர் சூழல்களில் காணப்படுகிறது. இந்த அமீபா இருக்கும் நீர் மூக்கின் வழியாக சென்று மூளையை பாதிக்கலாம் என்பதால் இது மூளையை உண்ணும் அமீபா என அழைக்கப்படுகிறது. இது ஆபத்தான, அரிதான நோய் ஆகும். 


Naegleria fowleri வகை அமீபா இருக்கும் நீர் மூக்கில் நுழையும்போது தொற்று ஏற்படுகிறது. மற்றும் அமீபா வாசனை நரம்பு வழியாக மூளைக்கு செல்கிறது. அசுத்தமான தண்ணீரை குடிப்பதன் மூலம் இந்த நோய்த் தொற்று ஏற்படுவது இல்லை. ஆனல் அந்த அமீபா மூக்கின் வழியாக மூளைக்கு செல்லும் போது பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க, 


Aneethi Review: பதைபதைக்க வைக்கும் காட்சிகள்... வசந்தபாலனின் அநீதி படம் சூப்பரா? ..சுமாரா? - முழு விமர்சனம் இதோ..!


Manipur CM Resign: பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்..பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவாரா மணிப்பூர் முதல்வர்?