Google Search : 2024ஆம் ஆண்டு முதல் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கலாச்சார நீரோட்ட நிறுவனம் என்ற மார்கெட் ரிசர்ச் நிறுவனம் நடத்திய ஆய்வில், பாலினம் மற்றும் அதுசார்ந்த அடையாளங்கள் குறித்து அமெரிக்கர்கள் அதிகம் தேடியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 2004ஆம் ஆண்டில் இருந்து, பாலினம் சம்பந்தமான தேடல்கள் 13 சதவீத வரை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கூகுள்
அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். கூகுளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் கூகுள் சர்ச்சில் அவசியம் இன்றியமையாததாக மாறி இருக்கிறது. எதை கேட்டாலும், அதற்கான விடையை கூகுள் தங்கள் பயனர்களுக்கு வழங்கி வருகிறது.
படிப்பு முதல் சமைப்பது எப்படி என்பது வரை அனைத்தும் கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது. குறைந்த விலையில் அதிக சேவைகளுடன் இணையவசதி கிடைப்பதால் பயனர்கள் தங்களின் வேலை சார்ந்த கேள்விகள் உட்பட அனைத்தையும் கூகுளில் தேடிகின்றனர். இந்நிலையில், 2024ஆம் ஆண்டு முதல் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் சர்ச்
சமீபத்தில் கலாச்சார நீரோட்ட நிறுவனம் என்ற மார்கெட் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தியது. அதன்படி, கூகுள் சர்ச்சில் அதிகம் தேடப்பட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளியாகின. அதில் பாலினம் மற்றும் அது சம்பந்தப்பட்டவை குறித்து அமெரிக்கர்கள் அதிகம் தேடியுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2004ஆம் ஆண்டில் இருந்து இந்த வகை தேடல்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 'Am I Gay. Am I Lesbian, Am I trans, How to come out', Nonbinary’ ஆகிய தேடல் வார்த்தைகளை தேடியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, ஆய்வு முடிவுகளில், நான் தன்பாலீர்ப்பாளர்கள், பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவர், பாலின மன உளைச்சல், திருநங்கை, திருநம்பி, இந்த மனநிலையிலிருந்து எப்படி வெளியே வருவது, போன்ற சொற்கள் அதிக அளவில் கூகுளில் தேடப்பட்டதாக அறிக்கையில் தெரிவக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த கூகுள் சர்ச் வார்த்தைகள் இணைய பயனர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க
Arikomban Elephant: அரிக்கொம்பன் யானை அடர் வனப்பகுதியில் விடப்படும் - தமிழ்நாடு அரசு