ஸ்பேஸ்எக்ஸின் புதிய 22 "வி2 மினி" இணையச் செயற்கைக்கோள்களை அதன் ஸ்டார்லிங்க் விண்மீன் தொகுப்பிற்காக ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் நேற்று காலை 8:20 மணிக்கு ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள ஸ்பேஸ் லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 40ல் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. எட்டு நிமிடங்களுக்குப் பிறகு, ஃபால்கன் 9 இன் முதல் நிலை பூஸ்டர், ஸ்பேஸ்எக்ஸின் ட்ரோனில் தரையிறங்க பூமிக்குத் திரும்பியது.

Continues below advertisement

Continues below advertisement

மற்றொரு பால்கன் 9 ராக்கெட் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள பேட் 39A இலிருந்து நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்கள் இல்லாத டிராகன் சரக்குக் கப்பலை அனுப்ப திட்டமிடப்பட்டது, ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த திட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. SpaceX இன் முதல் பால்கன் 9 ராக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 30 ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இறுதிகட்ட தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்டார்லிங்க் என்பது தொலைதூர இடங்களுக்கு குறைந்த விலையில் இணையத்தை வழங்குவதற்காக தனியார் விண்வெளிப் பயண நிறுவனமான SpaceX ஆல் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் ஆகும். ஒரு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தோராயமாக ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது. மேலும் ஸ்பேஸ்எக்ஸ் இந்த ஸ்டார்லிங்க் திட்டத்தில் சுமார் 42,000 செயற்கைக்கோள்களைக் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 2022 நிலவரப்படி, சுற்றுப்பாதையில் 3,271 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் உள்ளன, அவற்றில் 3,236 செயல்பாட்டில் உள்ளன என்று ஜோனாதன் மெக்டோவல் (விண்மீன் தொகுப்பைக் கண்காணிப்பவர்) தெரிவித்துள்ளார்.    

நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.  ஃபால்கன் 9 முதல்-நிலை பூஸ்டர் மூலம் மூன்றாவது முறையாக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதற்கு முன் நாசாவிற்கான ஸ்பேஸ்எக்ஸ் இன் க்ரூ, 6 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. அதேபோல் SES 03b mPower செயற்கைக்கோள்களை இந்த பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விமானம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 37வது (2023 ஆம் ஆண்டில்) ஏவுதலையும், ஒட்டுமொத்தமாக 237வது வெற்றிகரமான பயணத்தையும் குறிக்கிறது.  

School Girls Poisoned : ஆப்கானிஸ்தானில் இரு பள்ளிகளில், மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.. நடந்தது என்ன?

PM Modi: நாடாளுமன்றத்திற்கு வாங்க.. உங்க உரையை தாங்க.. பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா!