உக்ரைனின் இப்போதைய வலி அனைவருக்கும் தெரியும். போர்கள், இழப்புகள், வன்முறை நிறைந்த நிலப்பரப்பாக வரலாறு முழுதும் இருந்த இந்த நாடு இப்போது உலகின் மிகப் பெரும் போர்க்களமாகி இருக்கிறது. பலரும் இந்த நாட்டின் கதை, வரலாற்றைப் புரிந்துகொள்ள முன்வருகிறார்கள். ஆனால், இந்த நாட்டில் இயற்கையும் அழகும், கலைகளும் கொட்டிக் கிடக்கின்றன, இந்த நிலத்தின் நூற்றாண்டு கால வலியையும் அதற்கு சாட்சிகளையும் தாங்கி வருகின்றன. உக்ரைனின் ஐந்து அழகான விஷயங்களைப் பார்க்கலாம்.



  1. வைஷைவங்கா


இந்த நாட்டின் தேசிய உடை இது. கைகளால் பின்னப்பட்ட, பூக்கள் மற்றும் பிற வேலைப்பாடுகள் நிறைந்த உடை இது. அனைவரையும் இணைக்கும் இந்த புள்ளி ஒன்றே இந்த மக்களின் இணக்கத்தைப் பிரதிபலிக்கிறது.



  1. அடியாழ மெட்ரோ


உலகின் ஆழமான மெட்ரோ பாதைகளில் ஒன்று உக்ரைனில் இருக்கிறது. 1960-இல் நவம்பர் ஆறு இந்த மெட்ரோ நிறுத்தம் திறக்கப்பட்டது. க்யிவ் மெட்ரோவின் ஆர்சனல்னா நிலையம் பூமியிலிருந்து 346 அடியாழத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.




  1. உக்ரைனின் ஏழு உலக அதிசயங்கள்


ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பாவின் மிகப் பெரும் நாடு உக்ரைன். யுனெஸ்கோவின் உலக கலாச்சாரத் தளங்களில் ஏழு இங்கு இருக்கிறது. க்யிவ் புனித சோபியா தேவாலயம் மற்றும் லிவிவ் வரலாற்று மையம் இவற்றுள் அடங்கும்.



  1. சூரியகாந்தி விதைகள்


உலகில் அதிகம் சூரியகாந்தி விதைகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் உக்ரைன் முதலிடம் பிடிக்கிறது. சூரியகாந்தி விதைகளை ஏற்றுமதி செய்வது இந்த நாட்டின் அடிப்படையான பலம் வாய்ந்த வியாபாரம். ஆகையினால், இதன் நிலப்பரப்பெங்கும் அழகான நீண்ட சூரியகாந்தி தோட்டங்களைக் காணலாம்.



  1. காதல் குகை


வடமேற்கு உக்ரைனின் கைவிடப்பட்ட க்லாவனின் ரயில் பாதை உலகம் எங்கும் இருக்கும் காதலர்களால் கொண்டாடப்படும் இடம் ஆகி இருக்கிறது. பசும் இலைகள், கொடிகளால் சூழப்பட்டிருக்கும் இந்த இடத்தில் மனதிற்கு வேண்டுவதை நினைத்துக்கொண்டால் அது நடக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.  


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்