அமெரிக்க பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குநருமான ப்ரெண்ட் ரெனாட் உக்ரைனில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த தகவலை சம்பவ இடத்தில் இருந்த மருத்துவர்களும், சாட்சிகளும் உறுதி செய்துள்ளன. 






உக்ரைன் தலைநகர் கீவ் நகர போலீஸ் இது குறித்து கூறும் போது, “ ஒரு பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இர்பின் நகரத்தில் இன்னொருவரும் படுகாயம் அடைந்திருக்கிறார். " என்று கூறினர். இந்த செய்தியை உறுதிப்படுத்திய நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, திறமைவாய்ந்த போட்டோ கிராபரும், இயக்குநருமான ப்ரெண்ட் ரெனாட்டுக்கு நாங்கள் உக்ரைனில் எந்த பணியையும் நியமிக்கவில்லை என்று கூறியுள்ளது.


மேலும் அதில், “ ப்ரெண்ட் ரெனாடின் இறப்பானது எங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திறமையான போட்டோகிராபரும், இயக்குநருமான அவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பலவருடங்கள் பணியாற்றினார். அவரை நாங்கள் உக்ரைனில் பணியமர்த்தவில்லை. ஆனால் டைம்ஸ் பத்திரிகையின் பேட்ஜ் இருந்ததால் அவர் டைம்ஸ் பத்திக்கையாளர் என்ற தகவல் பரவிவருகிறது. ஆனால் அந்த பேட்ஜ் அவருக்கு முன்னதாக வழங்கப்பட்டது.”  என்று குறிப்பிட்டுள்ளது.


ப்ரெண்ட் ரெனாட் உடன் காயமடைந்த அமெரிக்கரான ஜுவான் பேசும் போது, “ இர்பின் முதல் பாலத்தை நாங்கள் கடந்த அகதிகள் வெளியேறுவதை நாங்கள் படமெடுக்க சென்றோம். ட்ரைவர் ஒருவர் எங்களை அழைத்து செல்ல முன்வந்தார். சோதனை சாவடியை கடந்ததும் அவர்கள் எங்களை சுட்டனர். உடனே ட்ரைவர் வாகனத்தை திருப்பினார். ஆனால் அவர்கள் நடத்திய தாக்குதலில் ப்ரெண்ட் ரெனாட் சுடப்பட்டு தனியாக விடப்பட்டார்.ப்ரெண்ட் Peabody அமைப்பின் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது