உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்க உள்ளதான சமீபத்திய ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


எலான் மஸ்க் :


தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் எலான் மஸ்கை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா இன்க் உட்பட தனது நிறுவனங்களில் குழந்தை பராமரிப்பு சலுகைகளை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்த  முழு விவரங்களையும் அடுத்த மாதம் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.






சர்ச்சை :


சமீபத்தில் எலான் மஸ்க்  தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்னும் உயர் அதிகாரி பெண் ஒருவருடன் ரகசிய உறவில் இருந்து இரண்டை குழந்தைகளை பெற்றெடுத்ததாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி ட்விட்டரில் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து,  மக்கள்தொகை நெருக்கடிக்கு தன்னால் இயன்றதைச் செய்வேன் என்று எலான் ட்வீட் செய்த ஒரு நாள் கழித்து தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.







எலான் ட்வீட் :


எலான் தற்போது வெளியிட்ட ட்வீட்டில் " குழந்தைகள் மதிப்புக்குரியவர்கள். எனது நிறுவனங்களில் குழந்தை பராமரிப்பு சலுகைகளை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளேன் . இதையே மற்ற நிறுவனங்கள் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன் " என தெரிவித்துள்ளார். டெஸ்லாவின் 2021 தாக்க அறிக்கையின்படி, பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் டெஸ்லா மற்ற யு.எஸ் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் யு.எஸ் வாகன உற்பத்தியாளர்களை விட பின்தங்கியுள்ளது. டெஸ்லாவின் அமெரிக்க தலைமைப் பதவிகளில் 17 சதவீதத்தை பெண்கள் வகித்துள்ளனர். Equileap  நிறுவனம் வெளியிட்ட 2020 அறிக்கையின்படி, ம S&P 500 நிறுவனங்களில் சுமார் 22 சதவீத பெண் நிர்வாகிகள் வேலை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண