Breaking Live: அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்திய பாஜகவினர்

Breaking News LIVE Updates: இன்றைய நாளின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...

ABP NADU Last Updated: 13 Aug 2022 04:33 PM
ஆந்திர முதலமைச்சருக்கு தமிழ்நாடு  முதலமைச்சர் கடிதம் 

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருஅணைகள் கட்டுவதற்காக ஆந்திரா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு.  கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணைகளை கட்டுவது சென்னை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை பாதிக்கும். அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாக கைவிடவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 


 

அமைச்சர் கார் மீது காலணி வீச்சு - பாஜகவினர் 6 பேர் கைது

அமைச்சர் கார் மீது காலணி வீசிய வீடியோ காட்சியை வைத்து பாஜகவினர் 6 பேரை கைது செய்தது போலீஸ். கைது செய்யப்பட்ட 6 பேரில் 3 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள் என தகவல்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீச்சு.

சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Beef Biriyani :சென்னை உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Beef Biriyani :சென்னை உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Breaking Live: தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாகத் தேர்வான சேலம்!

தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடமும், குடியாத்தம் 2ஆவது இடமும், தென்காசி 3ஆவது இடமும் பிடித்தன.


நாளை மறுநால் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.

Breaking Live: தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாகத் தேர்வான சேலம்!

தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடமும், குடியாத்தம் 2ஆவது இடமும், தென்காசி 3ஆவது இடமும் பிடித்தன.


நாளை மறுநால் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.

சென்னை உணவு திருவிழாவில் பீப் பிரியாணிக்கு  அனுமதி

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அரசு அனுமதி தந்தது.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று சொந்த ஊருக்கு வருகை

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று சொந்த ஊரான மதுரைக்கு வருகிறது. 

சென்னையில் தலைமை காவலர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை..!

சென்னை, எண்ணூரில் தலைமை காவலர் யுவராஜ் என்பவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Breaking Live: தமிழ்நாட்டில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றம்

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி வரும் 15ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி கோரியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு உள்பட நாடுமுழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வருகின்றனர்

Breaking Live: துப்பாக்கியால் சுட்டு எஸ்ஐ தற்கொலை!

பழைய குற்றாலத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு எஸ்ஐ பார்த்திபன் தற்கொலை செய்து கொண்டார்.


ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனின் காவல் பணிக்கு சென்ற பார்த்திபன் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வரத்து 88 ஆயிரம் கன அடியாகக் குறைவு

தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுவில் காவிரி நீர்வரத்து 1.10 லட்சத்திலிருந்து 88 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.


 

Background

ஆங்கில இலக்கிய உலகில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் எழுதிய சாட்டன் வெர்சஸ் புத்தகம் சர்ச்சைக்கு ஆளாகிய காரணத்தால் இவர் மிகவும் பிரபலம் ஆனார். இந்த நிலையில், அமெரிக்காவின் வடக்கு நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் பேசிக்கொண்டிருந்த சல்மான் ருஷ்டியை மர்மநபர் தாக்கியதுடன் கத்தியால் குத்தினார்.




கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் சல்மான் ருஷ்டி படுகாயம் அடைந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 75 வயதான சல்மான் ருஷ்டிக்கு மருத்துவமனையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயமடைந்த சல்மான் ருஷ்டிக்கு நிகழ்ந்த கத்திக்குத்து காரணமாக அவர் நரம்புகள் பாதிக்கப்பட்டு ஒரு கண்ணை இழக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  


மேலும் படிக்க : Johnson & Johnson : கேன்சர் குற்றச்சாட்டுகள்.. 2023 முதல் நிறுத்துறோம்.. அறிவித்த ஜான்சன் & ஜான்சன்.. ஏன்?


மர்மநபர் வயிற்றிலும் குத்தியதால் அவரது கல்லீரல் மோசமாக சேதமடைந்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சல்மான் ருஷ்டியின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய நபர் ஹதிமடார் என்றும், அவருக்கு வயது 24 என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.




2 ஆயிரத்து 500 நபர்கள் வரை கூடியிருந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


முன்பு, சல்மான் ருஷ்டி எழுதிய சாட்டன் வெர்சஸ் புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உயிருக்கு ஈரான் மத அமைப்புத் தலைவர் ரூபாய் 18.5 கோடி பரிசுத்தொகை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Salman Rushdie: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து...! நடந்தது என்ன?


மேலும் படிக்க : புவிசார் அரசியல் பதற்றத்தை தூண்டியுள்ள சீன ஆராய்ச்சி கப்பல்: பேசுபொருள் ஆனது ஏன்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.