அமெரிக்க நாட்டின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்றார். இன்று பதவியேற்ற நிலையில், நேற்றைய தினம் இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஒப்பந்தம் ஏற்பட்டது டிரம்ப்புதான் காரணம் என்ற அவருக்கு சாதகமான, தகவல் பரவி வருகின்றன. இந்நிலையில், இன்று இரவு அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில், என்னென்ன முக்கிய நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு உள்ளது என பார்ப்போம்.

அதிபர் டிரம்ப்: 

குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய  டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய கமலா ஹாரிசை தோற்கடித்து மீண்டும் அதிபராகுவதற்கான வாய்ப்பை பெற்றர். இந்நிலையில், இன்று இந்திய நேரப்படி சுமார் 10.30 மணியளவில் , பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவுக்கு மட்டும் சுமார் ரூ. 1, 731 கோடி செலவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியர்கள் யார் பங்கேற்பு

இவ்விழாவில் சுமார் 20, 000 பங்கேற்றதாக தகவல் தெரிவிக்கின்றன. இவ்விழாவில் பங்கேற்க உலகத் தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியர்கள் சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். மேலும், உலக அளவில் டாப் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் முகேஷ் அம்பானி மற்றும் அவரது நீதா ஆகியோரும் பங்கேற்றனர். இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிந்தது. 

Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?

இந்நிலையில், அதிபராக மீண்டும் 2வது முறையாக டிரம்ப பதவியேற்ற நிலையில், அவர் தேர்தல் பரப்புரையில் அடிக்கடி உச்சரித்த 5 முக்கிய நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதிரடி நடவடிக்கைகள்:

  1. டிரம்ப் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே, டிரம்ப் தெரிவித்திருந்ததாவது , அதிபரானால் இஸ்ரேல் -ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், நேற்றே இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் வந்திருப்பது டிரம்ப் வெற்றியாக பார்க்கப்படுகிறது. 
  2. மேலும், அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட சீனாவின் செயலியான டிக்-டாக் செயலி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போதே தடை நீக்கப்பட்டு, மீண்டும்  பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டது. 
  3. இதையடுத்து, வெளிநாட்டு பொருட்களின் இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். இதை எப்படி செயல்படுத்த போகிறார். நாடுகளின் அடிப்படையில் செயல்படுத்த போகிறாரா அல்லது பொருட்களின் அடிப்படையில் வரி விதிக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  4. மேலும், அனுமதியின்றி வெளிநாட்டு குடியேறிகளுக்கு தடை செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். இதை எப்படி செயல்படுத்தப் போகிறார், தற்போது அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பப்படுவார்களா அல்லது புதிய குடியேறியவர்களுக்கு மட்டும் தடையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
  5. இதையடுத்து, உள்நாட்டினவருக்கு வேலையை அதிகரிக்க, வெளிநாட்டினர் வேலை செய்பவர்களுக்கு அனுமதி வழங்கும் H1B விசா எண்ணிக்கையை குறைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

பிரதமர் மோடி நட்பு தொடருமா?

இந்தியாவுடன், டிரம்ப்பின் நட்பு நல்லுறவாகவே இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்தியாவை அமெரிக்காவால் தவிர்க்க முடியாது. இந்தியாவின் பொருளாதாரம் வளரும் பொருளாதாரமாக் இருப்பதாலும், அமெரிக்காவின் வளர்ச்சியின் இந்தியர்களின் பங்கும் குறிப்பிடத்தக்க வகையிலும் இருப்பது முக்கிய காரணம்.

ஆனால், கடந்த முறை மோடியுடன் இருந்த நட்புறவு , தற்போதும் ,அதே அளவு இருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், மை டியர் பிரண்டு  என அழைக்கப்பட்ட பிரதமர் மோடி, இன்றைய பதவியேற்பு விழாவில் அழைக்கப்படாதது யோசிக்க வைக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கடந்த தேர்தலின் போது வெளிப்படையாக டிரம்புக்கு ஆதரவு தெரிவித்த மோடி, டிரம்ப் தோற்றதால், சிக்கல் எழுந்தது. அதனால், தேர்தலின் போது, யாருக்கும் ஆதரவு அளிக்காமல் சற்று ஒதுங்கியே பிரதமர் மோடி இருந்தார். இது டிரம்ப்புக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இதனால், பழைய நட்பு தொடருமா என்றால், சந்தேகம்தான்.

ஆனால் , பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும் டிரம்ப்பின் நிலைப்பாடு, எப்போது-எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியாது என்றும், அவரது பழைய நடவடிக்கைகளே உதாரணம், ஆகையால் பொறுத்திருந்து பார்க்கலாம் எப்படி அதிபர் டிரம்ப் செயல்படுகிறார் என்று.