ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரான சிட்னி நகரில் உள்ள டாஸ்மானியாவில் உள்ள (Tasmania) கடற்கரையில் 250 பைலட் வேல்ஸ் எனப்படும் டால்ஃபின்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

டால்ஃபின் குடும்பத்தைச் சேர்ந்த பைலட் வேல்ஸ் என்றழைக்கப்படுபவை (pilot whales) டாஸ்மானியா கடலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மெக்கொய்ரி (Macquarie Harbour) துறைமுகத்தில் 250க்கும் மேற்பட்டவைகள் இறந்து கடற்கரையோரத்தில் கிடந்ததாக அந்நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை (Department of Natural Resources and Environment) தெரிவித்துள்ளது. 

கரை ஒதுங்கியதில் பாதிக்கும் மேற்பட்ட டால்பின்கள் உயிருடன் இருந்ததாக தெரிந்தது என்றும் அவற்றை காப்பாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அவற்றின் உடல்நிலை குறித்து தற்போது ஏதும் சொல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் இதே போன்று டாஸ்மேனியாவில் உள்ள கடற்கரையில் 14 பெர்ம் வேல்ஸ் ( perm whales) இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், கடல் வாழ்வியல் மாசு நிறைந்ததாக இருப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு கடினமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. கடலுக்குள் ஏற்படும் பூகம்பங்கள், கடல் வழித்தடத்தில் மனிதனின் கப்பல் போக்குவரத்து காரணமாக ஏற்படும் ஒலி மாசுபாடு, கப்பல் மற்றும் மீன்பிடி கப்பல்களிலிருந்து வெளியேறும் எண்ணெய் கழிவுகளாலும், இயற்கைக்கு மாறான மீன்பிடி முறைகளாலும் இது போன்ற உயிரினங்கள் கரை ஒதுங்க காரணமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் வாசிக்க..

Meena Kandasamy: இந்திய எழுத்தாளர் மீனா கந்தசாமிக்கு ஜெர்மனியின் “Penn" அமைப்பு விருது; குவியும் வாழ்த்துகள்..

Prison : சிறையிலே தனியறை.. மனைவியுடன் தனிமை.. நன்னடத்தை கைதிகளுக்கு அரசு கொடுக்கும் அனுமதி..

Parveen Babi: இயற்கை மரணம் தான்..ஆனாலும் பிரபல நடிகையின் வீட்டை வாங்க மறுக்கும் மக்கள்