பதவி உயர்வு கொடுக்கல! முதலாளியின் குடும்பத்தை கொடூரமாக கொலை செய்த ஊழியர்! பகீர் சம்பவம்!

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஹூஸ்டனில் தனது முதலாளியின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Continues below advertisement

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஹூஸ்டனில் தனது முதலாளியின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஃபாங் லு என்ற நபர், சீனாவிலிருந்து வந்த சில நிமிடங்களிலேயே செப்டம்பர் 11 அன்று கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

Continues below advertisement

ஜனவரி 30, 2014 அன்று இந்த படுகொலை நடந்தது. மாயோ சன் (50), மீக்ஸி சன் (49), திமோதி சன் (9), மற்றும் டைட்டஸ் சன் (7) ஆகியோரின் உடல்கள் தோட்டா துளைகளுடன் தனித்தனி படுக்கையறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கொலைக்கான காரணம் என்ன என்பதை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

58 வயதான ஃபாங் லு, மாயோயே அவரை பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கவில்லை என்றும் அதன் காரணமாக கோபத்தில் அனைத்து குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலிசார், நீதிமன்றத்தின் தாக்கல் செய்த ஆவணங்களின்படி, ஃபாங் அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுக்கு மாற்றப்பட விரும்பினார். மேலும், தன்னை பற்றி நல்ல விதமாக சொல்லும்படி மாயோயிடம் கேட்டுள்ளார்.

ஆனால், அவர் அலுவலகத்தை அடைந்தபோது, ​​​​ஃபாங் தனது சக ஊழியர்கள் தன்னுடன் வித்தியாசமாக நடந்துகொள்வதைக் கவனித்திருக்கிறார். மேலும் மாயோ தன்னைப் பற்றி இழிவாக ஏதாவது சொன்னதாக சந்தேகித்துள்ளார். மேலும் பதவி உயர்வு கிடைக்காமல் போனதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என எண்ணி இருக்கிறார்.

துப்பாக்கி பற்றிய முன்னுக்கு பின் முரணாக கருத்துகளை தெரிவித்ததால் விசாரணை அலுவலர்களுக்கு, ஃபாக் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பதவி உயர்வு குறித்து மாயோயுடன் ஃபாங் தகராறு செய்ததாக அவரது மனைவி விசாரணை அலுவலர்களிடம் கூறினார்.

ஃபாங் ஒரு துப்பாக்கியை வாங்கியதாக விசாரணை அலுவலர்கள், அவரிடம் கூறியுள்ளனர். ஆனால், அவரும் இக்கொலையை ஃபாக் செய்திருப்பார் என நம்பவில்லை.

வேலை உயர்வு சம்பவம் தொடர்பாக மாயே மீது கோபமாக இருப்பதாக ஃபாங் விசாரணை அலுவலர்களிடம் கூறியிருந்தார். ஆனால், கொலைகளில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று மறுத்து வந்தார். தடயவியல் குழு சன் குடும்ப வீட்டில் எடுக்கப்பட்ட பணப்பையில் இருந்து டிஎன்ஏ கலவைகளை கண்டுபிடித்தது. மாதிரிகள் ஃபாங்குடன் பொருந்தின. ஆனால், டிஎன்ஏ முடிவுகள் வந்த நேரத்தில், அவர் தனது சொந்த ஊரான சீனாவிற்கு சென்றுவிட்டார்.

ஃபாங்கை ஒருபோதும் கைது செய்ய முடியாது என்று விசாரணை அலுவலர்கள் நினைத்தனர். ஆனால் அவர் கலிபோர்னியா விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அவரை கைது செய்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola