மறைந்த பிரபல பாலிவுட் நடிகை பர்வீன் பாபியின் வீட்டை வாங்க பலரும் தயக்கம் காட்டுவதால் தரகர்கள் கவலையடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இந்தியில் கடந்த 1973ம் ஆண்டு சரித்ரா படம் மூலம் அறிமுகமான பர்வீன் பாபி அக்காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்தார். தொடர்ந்து தீவார், அமர் அக்பர் ஆண்டனி, சுஹாக், காலியா, நமக் ஹலால்,குத் தார், ஜானி தோஸ்த், மேரி ஆவாஸ் சுனோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், தனது கவர்ச்சியால் இளம் ரசிகர்களைக் கிறங்கடித்தவர். ஆனால் எதிர்பாராத விதமாக தனது 51 வயதில் மரணமடைந்தார். 


கடந்த  2005 ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று கடுமையான ஸ்கிசோஃப்ரினியாவால் பாதிக்கப்பட்ட பர்வீன் பாபி பல உறுப்புகளின் செயலிழப்பால் உயிரிழந்தார். மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள ரிவியரா அபார்ட்மெண்ட்  கட்டிடத்தின் 7வது மாடியில் உள்ள பிளாட்டில் தான் அவர் வசித்து வந்தார். அங்கு இறந்து 4 நாட்களுக்குப் பிறகு இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. கடலை பார்க்கும் வியூவுடன் கட்டப்பட்ட இந்த பிளாட் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.


ஆனால் இந்த பிளாட்டை விற்பது தரகர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாக. வீட்டின் பெயர் பலகையில் பர்வீன் பாபி என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த பிளாட்டில் நிறைய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் பிளாட்டைப் பார்க்க வருபவர்கள் பர்வீன் பாபியின் பிளாட் என்பதை அறியாமல் உள்ளார்கள் என்றும், அதனை தெரிந்துக் கொள்ளும் போது வித்தியாசமாக உணர்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.






அதேசமயம் பர்வீன் பாபி இயற்கை மரணம் அடைந்திருந்தாலும், வீட்டில் ஏதோ ஒன்று இருப்பதாக எண்ணங்கள் அங்கு வருபவர்கள் மனிதில் தோன்றுவது மிகவும் விசித்திரமானது என தரகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு பர்வீன் பாபியின் குடியிருப்பில் வாடகைதாரர் ஒருவர் இருந்தார். ஆனால் அவர் அந்த குடியிருப்பை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதால், சம்பந்தப்பட்ட நபர் வெளியேறினார். 


அந்த பிளாட் விற்பனைக்கு மட்டுமல்லாமல் வாடகைக்கும் உள்ளது. இது நேரடியாக வாங்க ரூ. 15 கோடியும்,  காட்டப்படுகிறது. மாத வாடகைக்காக  ரூ. 4 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.