மெட்டா நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் மூன்றாவது பெண் குழந்தைக்கு அப்பாவாக போவதாக  சமூக வலைத்தளங்களில் அறிவித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.


மகிழ்ச்சியில் மார்க்:


பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறக்கவுள்ளது. இந்த தகவலை, புதன்கிழமை சமூக வலைதளங்களில் மார்க் ஜுக்கர்பெர்க் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகரியாகவுள்ள மார்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா ஆகியோர், கடந்த 2012-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதி சமீபத்தில் 10வது ஆண்டு திருமண விழாவை கொண்டாடியது. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளான மாக்ஸ்-க்கு 6 வயதாகிறது, இரண்டாவது மகளான ஆகஸ்ட்-க்கு 5 வயதாகிறது.




பலரும் வாழ்த்து மழை:


இந்நிலையில்  சமூக வலைதளங்களில் மார்க் குறிப்பிட்டுள்ளதாவது, மேக்ஸ் மற்றும் ஆகஸ்ட்  ஆகியோர் அடுத்த ஆண்டு ஒரு புதிய சகோதரியைப் பெற போகிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரும், அவரது மனைவியும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதிகமான காதல் என குறிப்பிட்டுள்ளார்.




இதையடுத்து இந்த தகவலை அறிந்த பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.