விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள முட்டத்தூரில் பள்ளி மாணவர்கள் குல்பி ஐஸ் சாப்பிட்டு வாய்ந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள முட்டத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடித்து மாணவர்கள் வீட்டிற்கு செல்லும் போது பள்ளியின் வளாகத்தில் இளைஞர் ஒருவர் குல்பி ஐஸ் விற்பனை செய்துள்ளார். ஐஸ் விற்பனையாளரிடம் பள்ளி மாணவர்கள் குல்பி ஐஸ் வாங்கி பருகிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாய்ந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெற்றோர்கள் மாணவர்களை அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கெட்டுப்போன குல்பி ஐஸ் சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாய்ந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் குல்பி ஐஸ் விற்பனை செய்த இளைஞர் யார் என்பது குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.


இந்த நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி .பழனி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழோந்தி ஆகியோர் இன்று நேரில் சந்தித்து குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தனர்.




முட்டத்தூர் பகுதியில் பள்ளி மாணவர்கள் குல்பி ஐஸ் சாப்பிட்டு வாய்ந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


 




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Differently Abled Scholarship: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு


கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்


புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.