மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம், ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார். கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும்.




இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடமாக செயல்பட்டு வருவது மாவட்ட ஆட்சியர் வளாகம், இந்த வளாகத்தில் ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகமும் ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. இங்கு பொதுமக்கள் தங்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.


இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில தினகளுக்கு முன் பெய்த மழை தேங்கி நின்றது, இதில் சாக்கடை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் நோய் பரவும் அபயா நிலை உள்ளது, ஓட்டல் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கலந்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குட்டையில் இருந்த நீரில் கலந்து தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. தினமும் ஆட்சியர் அலுவலகம் வரும் அதிகாரிகள் கண்டும் காணமல் செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.