விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் காட்டுச்சிவிரி கிராமத்தில் ஏராளமான பெண்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை காட்டுச் சிவிரி ஏரிக்கரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது புதர் பகுதியை தூய்மை செய்ய முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அங்கு இருந்து வெளியேறிய விஷ தேனீக்கள் அங்கு வேலை செய்துகோண்டிருந்த வந்த பெண்களை விரட்டி விரட்டி கொட்ட துவங்கியது.


இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வலி தாங்க முடியாமல் அலற துவங்கினர். சில பெண்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர். இதையடுத்து உடனடியாக அருகில் இருந்த பிறர் அனைவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் படுக்கை கிடைக்காமல் காயமடைந்தவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விஷத்தேனீக்கள் கொட்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


 




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Differently Abled Scholarship: மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு


கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்


புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.