விழுப்புரம்: நாடு முன்னேற வேண்டும் என்றால் கிராமங்கள் வளர்ச்சி பெற வேண்டுமென கடுமையாக தமிழக முதலமைச்சர் உழைத்து கொண்டிருப்பதாகவும் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கு கொண்டு வந்துள்ளதாக திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகேயுள்ள முத்தாம்பாளையம் கிராமத்தில் 77 வது சுதந்திர தின நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முத்தாம்பாளைய கிராம மக்கள் தங்கள் பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரியை தூர்வார வேண்டும், அரசு பள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்க வேண்டும் பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் உடனடியாக செய்து தருவதாக உறுதியளித்தார்.
அதனை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ லட்சுமணன் கிராமங்கள் வளர்ச்சி பெற்றால் தான் நாடு முன்னேறும் என்றும் எதிர்கட்சியாக திமுக இருந்தபோதே கிராம சபை கூட்டத்தை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தியதாகவும், முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பல்வேறு தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். நாடு முன்னேற வேண்டும் கிராமங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என கடுமையாக தமிழக முதலமைச்சர் உழைத்து கொண்டிருப்பதாகவும் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மகளிருக்கு இலவச பேருந்து திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம், விவசாயிகளுக்கு ஒருலட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு, நான்முதல்வன் திட்டம் இல்லம் தேடி கல்வி என்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருவதாக எம் எல் ஏ லட்சுமணன் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.