விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற திறந்த வெளி கிணறுகள் பழுதடைந்த ஆழ்துளை குழாய் கிணறுகள் மற்றும் காலாவதியான குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.சி.பழனி உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திறந்த வெளி கிணறுகள் பழுதடைந்த ஆழ்துளைகுழாய் கிணறுகள் மற்றும் காலாவதியான குவாரிகள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் விபத்துகளால் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் கால்நடைகள் உயிர் இழப்பதை தடுத்திடவும் கண்காணித்திடவும், உள்ளாட்சி அமைப்பினர் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி துறையினருக்கும், கனிம மற்றும் சுரங்கத்துறையினருக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள மற்றும் ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காலக்கெடுவுடன் கூடிய விரைவு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்கள் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
திறந்த வெளி கிணறுகள் பழுதடைந்த ஆழ்துளை குழாய் கிணறுகள் மற்றும் காலாவதியான குவாரிகள் அமைந்துள்ள இடங்களின் உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களுக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ள மேற்படி ஆபத்து விளைவிக்கும் நீர்நிலைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாமாகவே முன்வந்து செய்திட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி கிணறுகளை சுற்றிலும் உயரம் அதிகமுள்ள தடுப்புச் சுவரினை அமைத்தும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை கடினமான இரும்பு மூடிகள் அமைத்தும், குவாரி பள்ளங்கள் மற்றும் திறந்தவெளி பள்ளங்களை பொருத்த மட்டில் கம்பி வேலி அமைப்புகளை ஏற்படுத்தியும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் ஆபத்து விளைவிக்கும் அமைப்புகளை மேற்கூறப்பட்ட அனைத்து அரசு துறை மாவட்ட நிலை அலுவலர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட மேற்படி அமைப்புகள் குறித்த பட்டியலினை ஒரு வார காலத்திற்குள் அவற்றின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்த அறிக்கையினை 10 தினங்களுக்குள்ளும் சமர்பித்திட அறிவுறுத்தியுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக சாலைகளை ஒட்டி அமைந்துள்ள பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாடற்ற திறந்தவெளி கிணறுகள் மற்றும் பள்ளங்களை பொறுத்தமட்டில் தொடர்புடைய அரசு துறையினர் 10 தினங்களுக்குள் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரித்தல் தேவையான இடங்களில் புதியதாக ஏற்படுத்துதல் மற்றும் சாலைகளின் எல்லைகளில் இருப்பு பாதுகாப்பு தகடுகள் அமைத்தல், இரவு நேரங்களில் ஒளிரும் அமைப்புகளை ஏற்படுத்துதல், சாலைகளில் தேவையான இடங்களில் கூடுதல் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற கோடுகள் அமைத்து அதன் அறிக்கையினை 26.08.2023 -க்குள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமர்பித்திட வேண்டும்.
நில உடைமையாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட தவறினால் அவர்களுக்கு எதிராக பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களுக்கு உடந்தையாக இருப்பதாக கருதி சட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.சி.பழனி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.