புதுச்சேரி: ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி புதுச்சேரியில் பிரசித்திபெற்ற கவுசிக பாலமுருகன் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


கிருத்திகை நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. ஆடிக் கிருத்திகை அன்று முருகன் கோவில்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம். இந்த நாளில் முருகப் பெருமானை வழிபட்டால் நம்மை அச்சுறுத்தும் சக்திகளையும், எதிரிகளையும் அழிப்பார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.


அந்த வகையில் புதுச்சேரி ரயில் நிலையம் அருகேவுள்ள கவுசிக பாலமுருகன் ஆலயத்தில் இன்று காலை முதல் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மூலவர் பாலமுருகன் சந்தனகாப்பு அலங்காரத்ததில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்து சென்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண