விழுப்புரம் : மரக்காணம் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்   கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து சென்ற உதவி பொறியாளரால் பரபரப்பு ஏற்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றிய கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது, இந்த கூட்டத்திற்கு சேர்மன் தயாளன் தலைமை தாங்கினார், துணை சேர்மன் பழனி முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, திருவேங்கடம், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இதில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் தங்கள் கிராமத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கோரிக்கை வைத்தனர், இதனை கேட்ட சேர்மன் தயாளன் அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார். இதே போன்று மரக்காணம் வட்டாரத்தில் மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளில் முறையாக வளர்ச்சி பணிகளுக்கான தொகைகள் வழங்கப்படாமல் கிடப்பில் வைத்துள்ளதாக மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் நிவாஸ் மீது குற்றச்சாட்டுகளை வைத்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினர், கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மரக்காணம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் நிவாஸ் பாதியிலேயே வெளியேறினார் இதனால் கவுன்சிலர்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Aadi Krithigai 2023: புதுச்சேரி கவுசிக பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம்... பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்


புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.