சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களிலிருந்து பூண்டு வரத்து குறைந்ததால் பூண்டு விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக , சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு 120 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது வரத்து குறைவாக இருப்பதால், அதன் விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.


இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "எங்களுக்கு பூண்டு மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு  வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி ஆகிறது. கடந்த நான்கு மாதங்களாக 120,180 ரூபாய் என்ற விலையில் விற்பனையான பூண்டு பொதுமக்கள் அதிக அளவில் வாங்குவதற்கு முன் வந்தார்கள். ஒவ்வொரு நபரும் கிலோ கணக்கில் வாங்கி சென்ற நிலையில் தற்போது வரத்து குறைவால் பூண்டு விலை அதிகரித்துக் கொண்டே இருப்பது மட்டுமல்லாமல், ஒரு கிலோ பூண்டு விலை 140 முதல் 240 ரூபாய் வரை விற்பனையாகிறது.


50, 40 கிலோ கொண்ட ஒரு மூட்டையின் விலை 7000 முதல் 8000 ரூபாய்க்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள் வியாபாரிகள். இதனால்  விலை அதிகரிப்பால், பொதுமக்கள் அதிக அளவில் பூண்டு வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. முதலில் கடைக்கு வருபவர்கள்  பூண்டு விலை கேட்கிறார்கள், விலை சொன்ன உடனே ஒரு கிலோ வாங்கும் நபர் அரைக்கிலோ கால் கிலோ என்ற வாங்கி செல்கிறார்கள். அதுபோல இஞ்சி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 300 ரூபாய்க்கும் புதிய இஞ்சி 150 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதுபோல பூண்டு விலையும் அதிகரித்திருப்பதால் எங்களுக்கு லாபம் ஏதுமில்லை நஷ்டம் தான் என கவலையுடன் கூறுகின்றனர் வியாபாரிகள்.


 


 




விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Villupuram: பேக்கரி கடையில் சாப்பிட்ட கேக்கில் பல்செட்... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்..!


செம்மண் குவாரி வழக்கு: நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடி; 29ம் தேதி ஒத்திவைத்த நீதிபதி


வாடிக்கையாளரிடம் முன்பணம் பெற்று ரூ. 27 லட்சம் மோசடி; விழுப்புரத்தில் கார் நிறுவன மேலாளர் கைது


புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.