பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரை கூறியபோது சைலண்ட் - பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரை கூறியபோது பா.ஜ.க., கட்சித் துண்டுகளை சுற்றியபடி ஆரவாரம் எழுப்பிய பா.ஜ.க., நிர்வாகிகள்.

நிர்வாகிகள் மட்டும் அனுமதி

மதுரை யா.ஒத்தக்கடை அருகே உள்ள மைதானத்தில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பெயர், பொறுப்பு, மாவட்டம் மற்றும் மண்டல் படிவத்தை விண்ணப்பித்தனர். இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனுமதி அடையாள அட்டையை பா.ஜ.க., நிர்வாகிகள் பதிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

பா.ஜ.க., மண்டல நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது
 
தொடர்ந்து தமிழக பா.ஜ.க., மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உரையாற்றியபோது பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரை கூறியபோது, அமைதியாக இருந்த பா.ஜ.க., நிர்வாகிகள். பா.ஜ.க., முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரை கூறியபோது, பா.ஜ.க., கட்சித் துண்டுகளை சுற்றியபடி ஆரவாரம் எழுப்பி, பா.ஜ.க., நிர்வாகிகள் முழக்கமிட்டனர்.
 
நயினார் நாகேந்திரன் - அண்ணாமலை ஆதரவாளர்கள் இடையேவெளி?
 
பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரின் பெயரை கூறியபோது அமைதியாக இருந்த நிர்வாகிகள், அண்ணாமலை பெயரை சொன்னபோது உற்சாகமடைந்த நிகழ்வு - பாஜகவில் அண்ணாமலை - நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் இடையே.. ஆதரவு இடைவெளி உள்ளதோ என கேள்வி எழுந்துள்ளது.
 
பா.ஜ.க., தொண்டர் மருத்துவமனையில் அனுமதி
 
அதே போல் மதுரை பாஜக கூட்டத்திற்கு வருகை தந்த நிர்வாகி சிவா என்பவருக்கு சுகர் பிரச்னை காரணமாக ஏற்பட்டது. பின்னர் அவசர ஆம்புலன்ஸ் மூலம் சிவாவை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.