விழுப்புரம்: வீட்டில் சமைப்பது போல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உணவு சமைத்து நோயாளிகளுக்கு வழங்க வேண்டுமென எம்எலஏ புகழேந்தி மருத்துவமனையில் ஆய்வு செய்து  உத்தரவிட்டார். 


விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் இயங்கவில்லை, மகப்பேறு பிரிவில் தாய்மார்களுக்கு படுக்கை வசதி இல்லை, நோயாளிகள் அறையில் மின் தடை  ஏற்படுவதாக குற்றஞ்சாட்டுகள் எழுந்தன. இதனை ABP நாடு செய்தி வெளியிட்டது, தொடர்ந்து விக்கிரவாண்டி திமுக எம் எல் ஏ புகழேந்தி இன்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


மருத்துவமனையில் உள்ள சமையற் கூடத்தில் சுத்தமான உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமையற் கூட ஊழியர்களிடம் சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் சமைப்பது போல் சமைத்து வழங்க வேண்டுமென உத்தரவிட்டார். ஆய்வின் போது பெண் ஊழியர் ஒருவரிடம் தான் யாரென்று தெரிகிறதா என எம்எல்ஏ கேட்டபோது தெரியவில்லை கூறியது எம் எல் ஏவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து எம்எல்ஏ புகழேந்தி சிடி ஸ்கேன் எடுக்கும் மையத்தில் ஆய்வு செய்தார்.


'இதெல்லாம் ஒரு அரசாங்கமா..?'...அரசு வேலை கிடைக்காத ஆத்திரத்தில் சட்டமன்ற வளாகத்திற்குள் சான்றிதழை தூக்கி எறிந்த இளைஞர்


அப்போது தாமதமாக ஸ்கேன் எடுப்பதாக நோயாளிகள் தெரிவித்தபோது மருத்துவமனை ஊழியர்களிடன் ஏன் தாமதமாக ஸ்கேன் எடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு மின் பற்றாக்குறை இருப்பதினால் பற்றாக்குறையினால் நாள் ஒன்றுக்கு பத்து நபர்களுக்கு மட்டுமே ஸ்கேன் எடுப்பதாகவும் ஜெனரேட்டரில் பழுது உள்ளதாக அதிகாரிகள் அலட்சியமாக தெரிவித்தனர்.  அதற்கு  அதிகாரிகளை கடிந்து கொண்ட எம் எல் ஏ புகழேந்தி மின்சார தடையின்றி வழங்க மாற்று ஜெனரேட்டர் வழங்குகிறேன் எனவும், பத்து நாட்களில்  மருத்துவமனைக்கு என்று தனியாக அமைக்கப்பட்டு வரும் மின் கேபிள் பணிகள் நிறைவடைந்த பிறகு மின் தடையின்றி மின்சாரம் வழங்கபடுமென கூறினார்.


விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்...தனக்கு சொந்தமென பெண் சாலை மறியல் - விழுப்புரத்தில் பரபரப்பு


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்


புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.