விழுப்புரம்: திண்டிவனம் கிடங்கல் கோட்டை வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமானுக்கு ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகமும், பக்தர்கள் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தலும் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கிடங்கல் கோட்டையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை அன்ப நாயக ஈஸ்வரர் சிவாலய வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வள்ளி, தெய்வயானை உடனுறை ஆறுமுகப் பெருமானுக்கு 57ம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முதல் நாள் பரணி நட்சத்திரத்தில் கோபூஜையுடன் துவங்கிய விழாவில் கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நந்திகேஸ்வரர் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்பட்டது. பின்னர் செடல் ராட்டினத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டது.


'இதெல்லாம் ஒரு அரசாங்கமா..?'...அரசு வேலை கிடைக்காத ஆத்திரத்தில் சட்டமன்ற வளாகத்திற்குள் சான்றிதழை தூக்கி எறிந்த இளைஞர்


அதே போல் மூலவர் அறம் வளர்த்த நாயகி அம்மன் மற்றும் அன்ப நாயக ஈஸ்வரருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு கிடங்கல் அகழிக் குளக்கரையிலிருந்து சக்தி கலசம் புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது.


இரண்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று காலை சக்திவேலுக்கும், காவடிகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகமும், பக்தர்கள் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்தலும், மழுவடி சேவையும் நடைபெற்றது. தொடர்ந்து 108 வேலும், சடலும் அணிவித்தலும் மற்றும் பழங்கள் அணிவித்தலும், செடல் ராட்டினமும் நடைபெற்றது. அதனை அடுத்து தீ மிதித்து ரதமும், காவடிகளும் வீதி உலா வந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


விழுப்புரம் மாவட்ட செய்திகள் : 


Aadi Krithigai 2023: புதுச்சேரி கவுசிக பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம்... பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்


Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்


விழுப்புரம்: சாதி ரீதியாக வேற்றுமை; மறு தேர்விற்கு ஹால் டிக்கெட் வரவில்லை; முதல்வர் தனி பிரிவுக்கு புகார்


புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.