திருவண்ணாமலை மாவட்டம் நல்லன்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த பெருமாள் வயது (50). இவர் ஆடுகளை மேய்த்து வருகிறார். பெருமாள் தன்னுடைய ஆடுகளை காலையில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை வீட்டிற்கு திருப்பி அழைத்து வருவார். இந்நிலையில் பெருமாள் நேற்று தன்னுடைய ஆடுகளை வழக்கம்போல் காலையில் மேய்ச்சலுக்கு ஒட்டிச்சென்று, மாலையில் வீட்டிற்கு ஓட்டிவந்தார். அப்போது வீட்டிற்கு  திரும்பி கொண்டு இருந்தபொழுது சாலையை கடக்க முயன்ற ஆடுகள் மீது சென்னை வடபழனியை சேர்ந்த விஸ்வநாதன் வயது (36) என்பவர் திருவண்ணாமலையில் இருந்து பாண்டிச்சேரியை நோக்கி காரை அதிவேகமாக ஓட்டி வந்தார்.


கடந்த 24 மணிநேரத்தில் என்ன நடந்தது..? உலக நிகழ்வுகளை ஒரு நிமிடத்தில் அறிய.. 7 மணி செய்திகள்!


 




அப்போது சாலையை கடக்க முயன்ற ஆடுகள் மீது கார் அதிவேகமாக மோதியது, அதில் சில ஆடுகள் சினிமா பட காட்சிகள் போன்று தூக்கி விச்சப்பட்டது. இதனைக் கண்ட பெருமாள் அதிர்ச்சி அடைந்தார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. அதனைத்தொடர்ந்து இதனைப்பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆடுகள் மீது காரை  மோதிய நபரிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்று தரவேண்டும் என்றும், எங்களுடைய கிராமம் பகுதியில் இது போன்று பல்வேறு விபத்துகள் நடைபெற்று வருவதாகவும், நெடுஞ்சாலையில் தான் பள்ளிகள் உள்ளதாகவும், இவ்வழியாக செல்லக்கூடிய கார், பேருந்து, வேன் அனைத்தும் அதிவேகத்தில் செல்கின்றது எங்கள் கிராமத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


Watch Video: சாலையில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட 200 வாகனங்கள்...! என்ன காரணம்...?


 


 




மேலும், இப்பகுதி மக்கள் பல்வேறு முறை அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருவண்ணாமலை விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உங்களின் கோரிக்கைகளை குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன் பிறகு சாலை மறியலை கிராம மக்கள் கைவிட செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Watch Video: விமானத்தில் பயங்கர சண்டை... அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்... என்னதான் நடந்தது..?