திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நேற்று மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மகளிர் குழுக்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் 320 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுமார் 20.86 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு மற்றும் 204 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு சுமார் 101.99 கோடி பெருங்கடனும் வழங்கப்பட்டது. மேலும் இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பே.கிரி, பே.சு.தி. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னதாக அமைச்சர் எ.வா.வேலு பேசுகையில்;
தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சியில் பொண்களுக்கான திட்டங்களை சார்ந்தே வந்து கொண்டு உள்ளதாகவும், திமுகவின் தாய் கழகம் நீதிகட்சி தான் முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமையை அளித்தது என்றும், திமுக ஆட்சியில் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் இலவச வீடுகட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டது என்றும், குறிப்பாக 1989-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தான் மகளிர் சுயஉதவிகுழு தொடங்கப்பட்டு, அதன் முதல் நிகழ்ச்சி தருமபுரியில் நடைபெற்றது என்றும், வீடுகளுக்கு100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய இணைப்புகளுக்கு மும்முனை மின்இணைப்பு என பல்வேலு திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் தான் செயல்படுத்தப்பட்டது என்றும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் தற்போதைய திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சி என்றும்,
அதன் அடிப்படையில் தான் நகர பேருந்துகளில் பொண்களுக்கு இலவச பயணம், மேலும் 8-ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண திட்டத்தினை துவக்கி 5000 ரூபாய் உதவி தொகையை வழங்கும் திட்டத்தினை துவக்கியது திமுக அரசு தான் என்றும், இதன் அடிப்படையில் தான் அதிமுக அரசு தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தினை கொண்டு வந்தது என்றும், ஆனால் இந்த திட்டத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வரும்போது 3 லட்சத்து 49 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தபடாமல் அதிமுக அரசு இருந்தது என்றும், இதனை மாற்றி கல்லூரிக்கு படிக்கும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவி தொகையை அறிவித்தது திமுக அரசு என்றும், பெண்களால் தான் குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த முடியும், பிள்ளைகளை படிக்க வைக்க முடியும், இதன் மூலம் சமூக அந்தஸ்த்தில் அவர்கள் முன்னேற முடியும் என அறிந்து பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறார் தமிழக முதல்வர், அனைவரும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் திமுக அரசின் திராவிட மாடல் அரசு என்றும் கூறினார்..