சீனாவில் கொட்டும் பனி:


மத்திய சீன நகரமான ஹெனான் மாகாணத்தில் உள்ள Zhengzhou நகரில் புதன்கிழமை காலை மிகவும் பனிமூட்டமான நிலை காரணமாக, பாலத்தின் மீது ஏராளமான கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது.






கார் மற்றும் டிரக்குகள் நொறுங்கி விழுந்து கிடப்பதையும், ஒன்றின் மேல் ஒன்றாகக் குவிந்து கிடப்பதையும் சமூக ஊடகங்களில் பரவி வாறுகிறது. இந்த சம்பவம் Zhengxin Huanghe பாலத்தில் இடம்பெற்றது.  இந்த விபத்தில் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.


200 வாகனங்கள் சேதம்:


சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் சுமார் 200 வாகனங்கள் சேதமடைந்தது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் எனவும் அதிகாரிகள் முதற்கட்ட தகவலாக தெரிவித்தனர்.


சீனாவில் பல மாநகரங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது. 500 மீட்டருக்கும் குறைவாகவே எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடிகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.  விபத்து நடைபெற்ற இடத்திற்கு 11 தீயணைப்பு வண்டிகள் விரைந்தது.  Zhengxin Huanghe Bridge மஞ்சள் நதி பகுதியில் இருக்கும் பிரதானமான மேம்பாலமாகும்.