தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியினால் வங்கி சார்ந்த வேலைகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துவிட்டது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை இழக்கும் நிலை நேரிடுகிறது. நாடு முழுவதும் வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது வீட்டில் இருந்தபடியே எந்த நேரத்தில் வேணாலும் பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. பணம் எடுப்பது, பணம் டெபாசிட் செய்வது, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவைகளையும் வீட்டில் இருந்தபடியே பெறலாம். இவ்வாறு மக்கள் அதிக அளவு ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சில மோசடிகளும் நடைபெற்று வருகிறது.

 

வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணைப் பெற்று வங்கியிலிருந்து ஊழியர்களை போல பேசி வாடிக்கையாளர்களிடமிருந்து தனிப்பட்ட வங்கி சார்ந்த தகவல்களை திருடி விடுகின்றனர். இந்த விவரங்களை வைத்து வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர். இது போன்ற ஆன்லைன் மோசடி தமிழகத்தில் சில மாவட்டங்களில் அதிகரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோசடி வலையில் சிக்கியுள்ளவர்கள் 1930 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



 

இந்நிலையில் புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்தவர் ரமேஷ் மகன் குருசபரிஷ்(வயது 24). இவர் வெளிநாட்டிற்கு எண்ணெய் வகைகளை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவரது போனிற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து பேசுவதாகவும், தங்கள் மருத்துவமனைக்கு டாஸ்மானியா ஆயில் தேவைபடுவதாக பேசியுள்ளனர். அதற்கு குருசபாரிஷ் தன்னிடம் அந்த ஆயில் இல்லை என கூறியுள்ளார். அடுத்த சில தினங்களில் குருவின் செல்போனுக்கு இன்னொரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் டாஸ்மானியா ஆயில் மும்பையில் இருப்பதாக தெரிவித்தார். உடனே குரு ஸ்பெயின் ஆர்டரை நம்பி மும்பை நிறுவனத்தில் ஆயில் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். முதற்கட்டமாக 10லிட்டர் ஆயில் அனுப்பப்பட்டது. இதற்கு கூடுதலாக 5 சதவீதம் தள்ளுபடி செய்து கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து குரு 8 தவனைகளில் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 999 அனுப்பியுள்ளார். அதன்பிறகு ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த போன்காலுக்கு தொடர்பு கொண்டதற்கு எந்த பதிலும் இல்லை. இதனால் கொள்முதல் செய்த ஆயிலை மும்பை நிறுவனத்திற்கு திரும்ப அனுப்ப முயற்சி செய்தபோது அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து கொண்ட குருசபரிஷ், மாவட்ட காவல் சூப்பிரெண்டுடிடம் புகார் செய்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். சினிமாவில் காண்பிக்கும் காட்சிகள் போல் போனில் பேசி மோசடி செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.