நடிகர் விஜய் 1993 -ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் 30 ஆண்டுகால கலைப்பயணத்தை கொண்டாடும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம் விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டரணி சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். 




DSP Movie: விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படம் பார்க்கப் போன ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ட்ரெண்டாகும் போட்டோ..!


அதன் ஒன்றாக விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி மாவட்ட பொருளாளர் தளபதி சுமன் தலைமையில் சீர்காழி பேருந்து நிலையம், பெரிய கோயில், சீர்காழி ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் வசிக்கும் நலிவடைந்த மக்களுக்கு போர்வை மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ‌விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டரணியினர் ஏழை எளிய மக்களுக்கு போர்வையை வழங்கினர். கடும் குளிர் காலமான மார்கழி மாதம் தொடங்க உள்ள நிலையில் 100 பேருக்கு இந்த நிவாரண உதவியை விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி சார்பாக வழங்கினர்.




IPL Mini Auction: ஐபிஎல் மினி ஏலம்: ரூ. 2 கோடி அடிப்படை விலை லிஸ்ட்டில் இடம்பெறாத இந்திய வீரர்கள்..!


அதுமட்டுமின்றி நடிகர் விஜய்யின் 48 வது பிறந்த நாள் விழா  தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஜுன் 22ம் தேதி விஜயின் பிறந்தநாள் என்றாலும், அன்று மட்டும் இன்றி ஆண்டு முழுவதும் விஜய் பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகளை வழங்கி, கொண்டாட இருப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர்  பல்வேறு வகைகளில் பல நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.   




Gatta Kusthi Twitter Review: பக்கா பேமிலி என்டர்டெயின்மென்ட்.. விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’யின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!


முன்னதாக கொரோனா ஊரடங்கு காலக்கட்டங்களில் ஏராளமான உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தினால் செய்து வந்தனர் மேலும், ஆதரவற்றோர் இல்லங்கள், அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி அரசு மருத்துவமனைகளில் பிரசவம் ஆகும் தாய் மற்றும் குழந்தையை இலவசமாக வீடுகளில் அழைத்துச் செல்ல வாகன வசதி என உதவி, முதியோருக்கு பால், முட்டை மற்றும் ரொட்டி விலை இல்லாமல் வழங்கினர். இதுபோன்ற ஆண்டின் 365 நாட்களும் ஏதேனும் ஒரு வகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


AIADMK EPS: “ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக வளர்ச்சியை தடுக்க முடியாது” - இபிஎஸ் ஆவேச பேச்சு