Gatta Kusthi Twitter Review: பக்கா பேமிலி என்டர்டெயின்மென்ட்.. விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’யின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Gatta Kusthi Twitter Review: நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவிதேஜா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி.

நடிகர் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவிதேஜா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி. கதாநாயகனாக விஷ்ணுவிஷாலே நடித்திருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். மேலும் முனீஸ்காந்த், கருணாஸ்,கஜராஜ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.  இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் ரவிதேஜா நடித்துள்ளார்.இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கி இருக்கும் இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருக்கிறார்.

ஏற்கனவே கடந்த நவம்பர் 2 ஆம் தேதி விஷ்ணு விஷாலின் பிறந்தநாளன்று   தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து வெளியான ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்றைய தினம் தியேட்டர்களில் படம் ரிலீசானது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்தை காலை முதல் காட்சியில் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை காணலாம். 

 

Sponsored Links by Taboola