கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் மக்களுக்கு பல்வேறு இன்னல்களை அளித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க பல்வேறு நாடுகளும் வழி தெரியாமல் திணறுகின்றனர். மேலும் இந்த வைரஸ் ஆனது வெவ்வேறு தன்மைகளில் உருமாற்றம் அடைந்து மருத்துவ துறைக்கு பெரும் சவால் விடுத்து வருகிறது. இந்த பெரும் தொற்றை  ஒழிக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி ஒன்றே தீர்வு என கருதி தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டுகிறது.


Ind vs SA, 2nd Test Match Highlights: முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் இந்தியாவை முடித்த தென் ஆப்பிரிக்கா..!




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 432 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 23 ஆயிரத்து 106 குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 319 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக 73 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று முதல் 15 வயது வரை தடுப்பூசி செலுத்தும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதை தொடர்ந்து கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசிபோடும் பணி தொடங்கி உள்ள நிலையில்  அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறாருக்கான தடுப்பூசி போடும் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார். 


Brazil President Hospitalized: பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ மருத்துவமனையில் அனுமதி




மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் உள்ள சம்பந்தம் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை துவங்கி வைத்த ஆட்சியர் லலிதா கூறுகையில்,  கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் முழுமையாக அறிந்து பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி அனைவரும் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள ஊக்கம் ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 வயதிலிருந்து 18 வயதிற்கு உட்பட்டோர் 42 ஆயிரம் பேர் உள்ளனர் என்றும், இதில் 35 ஆயிரத்து 360 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளியை தடுப்பூசி  செலுத்தப்படவுள்ளது என்றார்.


100 ஆண்டுகளாக திருச்சி மக்களை சப்பு கொட்ட வைக்கும் யானை மார்க் மிட்டாய் கடை - காமராஜர் முதல் கருணாநிதி வரை ருசித்த கூடை பூந்தி