பிரேசிலின் அதிபராக பொறுப்பு வகிப்பவர் ஜேர் போல்சோனரோ. 66 வயதான இவருக்கு இன்று திடீரென அடிவயிற்றில் வலி ஏற்பட்டது. இதையடுத்து, போல்சோனராவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிரேசிலின் தொலைக்காட்சி நிறுவனமான குளோபோ அதிபர் போல்சோனரோ மருத்துவமனைக்கு நடந்து செல்லும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அதிபரின் விமானம் சா பாலோ நகரத்தில் அந்த நாட்டு நேரப்படி அதிகாலை நள்ளிரவு 1.30 மணிக்கு சென்றுள்ளது. அவருக்கு வயிற்றில் குடல் அடைப்பு ஏற்பட்ட காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவரது உடல்நலம் குறித்து வெளியாகியுள்ள தகவலில் பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ உடல்நலம் நிலையாக உள்ளது. தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நலத்தை மருத்துவர் அன்டோனியா லூயிஸ் டி வாஸ்கோன்சிலோஸ் மாசிடோ தலைமையிலான மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள சூழலில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது தொடர்பான எந்த முன்னறிவிப்பும் வெளியாகவில்லை.
போல்சோனரோ 2018ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் கத்தியால் குத்தப்பட்டார். அந்த சம்பவத்தில் உயிர்பிழைத்தாலும் போல்சோனரோ கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். அது முதல் அவ்வப்போது அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவதுடன், சில முறை மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ விரைவில் நலம் பெற வேண்டும் என்றும், உடல்நலம் தேறி தனது பணியை தொடர வேண்டும் என்றும் பலரும் பிரார்த்தி வருவதாக பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க : Florona | கொரோனாவே போகல.. அதுக்குள்ள ஃப்ளோரோனாவா? ஃப்ளோரோனா என்றால் என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்