இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. கோலிக்கு பதிலாக ராகுல் இந்திய அணியை வழிநடத்த, முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது இந்திய அணி. 


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை அடுத்து, முதுகு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்க மாட்டார் என டாஸின்போது அறிவிக்கப்பட்டது. இதனால், கோலிக்கு பதிலாக ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்பட்டார். 


போட்டியில் டாஸ் வென்ற ராகுல், பேட்டிங் தேர்வு செய்தார். மயங்க், புஜாரா, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவெளியின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து ராகுல் மட்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், 13வது அரை சதத்தை அடித்து அசத்தினார் ராகுல்.






ஆனால், அரை சதம் அடித்த வேகத்தில் விக்கெட் கொடுத்து அவுட்டானார். அவரை அடுத்து விஹாரி, பண்ட் ஆகியோரும் அதிரடியாக ரன் சேர்க்காமல் வெளியேறினர். அஷ்வின் மட்டும் நிதானமாக நின்று 46 ரன்கள் குவித்தார். அவருடன் களத்தில் நிற்காமல் ஷர்துல், ஷமி, சிராஜ் ஆகியோரும் விக்கெட்டுகளை கொடுத்தனர். இதனால், முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி.






தென்னாப்ரிக்கா அணியைப் பொருத்தவரை, ஜென்சன் 4 விக்கெட்டுகளும், ஒலிவர், ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். தென்னாப்ரிக்காவின் மிரட்டல் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்காமல் முதல் நாளிலேயே இந்திய அணி அவுட்டாகி இருப்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண