நாகப்பட்டினத்தில் வெளிப்பாளையம், பெருமாள்கோவில்வீதி, கூடமுடையோர்காலனி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சமீபகாலமாக களவு போனது. இருசக்கர வாகனங்கள், ஆடு, கோழி திருடு போனது குறித்து பொதுமக்கள் வெளிப்பாளையம் மற்றும் நாகை நகர காவல்நிலையத்தில்  கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் புகார் அளித்தனர். இதேபோல் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு மனைவியின் பிரசவ காலம் மற்றும் உறவுகளின் உடல்நிலை குறைவால் அவசர கதி என அழைத்துவரப்பட்டு அவசர சிகிச்சையில் உறவுகளை சேர்த்து  மீண்டும் வாகனத்தை எடுக்க வரும் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் காணாமல் அதிர்ச்சியுற்ற வாகனத்தின் உரிமையாளர்கள் வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாகை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் முனிசேகர் தனது இரு சக்கர வாகனத்தை காடம்பாடி வீட்டில் நிறுத்திவிட்டு சென்னை சென்றுள்ளார்.



 

பின்னர் இன்று காலை வந்து தனது வாகனத்தை வீட்டில் பார்த்த போது அந்த வாகனம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது செல்போனில் இருந்த ஜிபிஎஸ் கருவியை இயக்கி பார்த்தபோது, அந்த வாகனம்  நாகை நாகை அருகே வெளிப்பாளையம் நாடார் தெருவில் உள்ள ஒரு தண்ணீர் கேன் குடோனில் பதுக்கி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அங்கு வந்த  போலீசார் , அந்த குடோனின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கே 4, இருசக்கர வாகனங்கள், மூன்று பட்டாக்கத்தி, ஆடு, கோழி உள்ளிட்டவை பதுக்கி வைத்தது அம்பலமானது.

 



 

இதையடுத்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், குடோனில் பதுங்கி இருந்த செல்லூர் சுனாமி குடியிருப்பு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் தர்மா மற்றும் செல்லூர் சுனாமி குடியிருப்பு டி,எம்,எம்,எஸ் சேர்ந்த வில்லியம் மகன் செல்சன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் வாகன திருட்டில் பல நபர்கள் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடினர் களத்தில் இறங்கினர். இதில் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் மேலும் பல்வேறு நபர்களிடம் இருந்து திருடி செல்லப்பட்ட 4, இருசக்கர வாகனங்களும், ஆடு கோழிகள் இருந்தது தெரியவந்தது. அவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நாகையில் ஜிபிஎஸ் கருவியை வைத்து இருசக்கர வாகனங்களை திருடிச் சென்ற திருடர்களிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டபோது ஏராளமான வாகனங்கள் சிக்கி வருவது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.