மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் 30 வயதான நிவாஸ் ரத்தினம். கொத்தனார் வேலை செய்து வந்த நிவாஸ் ரத்தினம் தனது வீட்டில் எலக்ட்ரீசியன் இன்றி தானாக புதிய மின் மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது மின் விளக்குகள் மின் இணைப்பு கொடுக்க முற்பட்ட போது எதிர்பாராதவிதமாக நிவாஸ் ரத்தினம் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால் துடி துடித்த கணவர் நிவாஸ் ரத்தினம் காப்பாற்ற அவரது மனைவி ஹேமா தனது இரண்டு வயது குழந்தையுடன் முயன்றுள்ளார். இதில் மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவவ இடத்திலேயே உயிரிழந்தனர். சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்து மூவரையும் பரிசோதித்த போது அவர்கள் இறந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த புதுப்பட்டினம் காவல்துறையினர் மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி, குழந்தை உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் துர்வஷ்டமானது என்றும், மின்சாதனங்களை கையாளும் போது மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்றும், அதுவும் குறிப்பாக எலக்ட்ரிக்கல் பணிகளை மேற்கொள்ளும் போது அதில் கைதேர்ந்த துறை சார்ந்த நபர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும், நாம் அவருக்கு கடும் சிறிய ஊதியத்தை மிச்சம் பிடிப்பதாக எண்ணி தானாக மேற்கொள்ளும் பணியை இது போன்ற மிகப் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது எனவும், அதன் விளைவாக இன்று ஒரு எலக்ட்ரீசியனை கொண்டு மின் விளக்கை பொருத்தும் பணியை செய்து இருந்தால் குழந்தை உட்பட மூன்று உயிர்கள் பறி போக வாய்ப்பு இருந்திருக்காது எனவும், இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் இனி வரும் காலங்களிலாவது இதனை ஒரு எடுத்துக்காட்டாக நினைத்து செயல்பட வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.