பெங்களூரில் நடைபெற்று வந்த இலங்கை அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது விக்கெட் கீப்பர் ரிஷப்பண்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் வெறும் 29 பந்துகளில் இந்த அரைசதத்தை அடித்தார். இதனால், இந்திய அணியின் ரன்னும் மளமளவென எகிறியது.


இந்த நிலையில், ரிஷப் பண்டின் ஆட்டம் குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியிருப்பதாவது,


“ அவருடைய பேட்டிங் அவருடைய பேட்டிங்தான். நாம் அனைவருக்கும் அவர் எப்படி பேட் செய்வார் என்று தெரியும். ஒரு அணியாக அவரது விருப்பப்படி அவரது பாணியிலே பேட்டிங் செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மனதில் ஆட்டத்தின் சூழலும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். அதையும் அவரிடம் கூறிக்கொண்டே இருப்போம். ஒரு அணியாக நாங்கள் திட்டமிட்டபடி அவரது ஆட்டம் இருக்க வேண்டும் என்றே விரும்பினோம். அவரது விளையாட்டுத் திட்டங்களில் அது நன்றாகவும், சிறப்பாகவும் தெரிகிறது.




சில சமயங்களில் தலையை அடித்து நொறுக்கும் ஷாட்கள் அவர் ஆடுவார். ஏன் இந்த ஷாட்டை நீங்கள் ஆடினீர்கள் என்று நீங்கள் கேட்பீர்கள். ஆனால், நாங்கள் அவருடன் இதை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். ரிஷப் பண்ட் 40 நிமிடங்களில் ஆட்டத்தை மாற்றும் திறமை படைத்தவர்.


நான் பார்த்ததிலே அவரது கீப்பிங் இந்த முறை சிறப்பாக இருந்தது. கடந்தாண்டு இங்கிலாந்து வந்தபோது அவர் சிறப்பாக விளையாடினார். ஒவ்வொரு முறையும் அவர் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்படுகிறார். அது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. “


இவ்வாறு அவர் கூறினார்.




இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப்பண்ட் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  


24 வயதே ஆன ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1,920 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 159 ரன்களை டெஸ்ட் போட்டியில் குவித்துள்ளார். இவற்றில் 4 சதங்களும், 9 அரைசதங்களும் அடங்கும். ரிஷப் பண்ட் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா நாடுகளுக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண