மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு சொந்தமான விசை படகில் பாஸ்கர், இளையராஜா, பிரபு, மாணிக்கம் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் இன்று காலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் பூம்புகார் துறைமுகத்திற்கு கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக படகு தத்தளித்து.




Actor Vijay: விஜய் படத்தில் ரன்வீர்சிங்.. விருப்பத்தை தெரிவித்த இயக்குநர்..பரபரப்பில் பாலிவுட்!


இதனால் நிலை தடுமாறிய விசை படகு கடலில் மூழ்கியது. இதனையடுத்து  படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்தனர். இதனை கண்ட கடலில் மீன்பிடிப்பில் ஈடுப்பட்டிருந்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு பாதுகாப்பாக கரை சேர்த்தனர். மீனவர்கள் கொடுத்த தகவலின் பெரில் வானகிரி மீனவர்கள் மாற்று படகுகள் மூலம் சென்று, கடலில் மூழ்கிய சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான விசை படகை இழுத்து கரைக்கு வந்தனர். அதன் பின்னர் பொக்லை இயந்திரம் மூலமாக மீட்டு கரைக்கு இழுத்து வந்து சேர்ந்தனர். 




CM Stalin : ”மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கிய பாதை அன்பு பாதை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்


ஆனால் படகு முழுவதும் உடைந்து சேதமடைந்துள்ளதால் இனி அந்த படகை பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளால் அந்த படகின் உரிமையாளர் வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றார். மேலும் கடலில் மூழ்கி சேதமான படகுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.


மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம் - வருவாய் கோட்டாட்சியர் பங்கேற்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 -ஆம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து சம உரிமையுடன் வாழ, ஏற்ற சூழலை உருவாக்கி, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்கிட தமிழக அரசும் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், மயிலாடுதுறையில் உள்ள மகா ஈஸ்வர் என்ற மாற்றுத்திறனாளிகள் பள்ளியில், இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. 




பள்ளித் தலைவர் குங்குமஈஸ்வரி, செயலர் சிவராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 50 -க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலைஞர், எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்கள் போன்றும், ஒளவையார், விஸ்வாமித்திரர், அம்மன் வேடம் அணிந்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா பங்கேற்று, நிகழ்ச்சிகளை பார்வையிட்டதுடன், மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினார்.


ஒரு கிலோ மல்லி பூ 5000 ரூபாயா? - தேனி , திண்டுக்கல்லில் உச்சத்தை தொட்ட விலை - காரணம் என்ன..?


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற