சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அப்படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி நடிகர் விஜய்யை பாராட்டி பேசியது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஆங்கில நாடகத்தின் தந்தை என அழைக்கப்படும் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய தி காமெடி ஆஃப் எரர்ஸ் என்ற நகைச்சுவை நாடகத்தை மையப்படுத்தி சர்க்கஸ் என்ற படத்தை பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கி தயாரித்துள்ளார். இதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஜானி லெவர்,  வருண் சர்மா மற்றும் சஞ்சய் மிஸ்ரா போன்ற பல நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  


இதனிடையே சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரோஹித் ஷெட்டியிடம் பான் இந்தியா படம் எடுப்பது பற்றியும், எந்த தென்னிந்திய நடிகருடன் இணைய விரும்புகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.






அதற்கு விஜய்,ரஜினி, அஜித்,  கார்த்தி போன்ற நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். குறிப்பாக விஜய் மற்றும் ரன்வீர் சிங்கை ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க விருப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 






லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் ரன்வீர் சிங்கிற்கு மிகவும் பிடிக்கும். அதில் இடம் பெற்ற பாடலுக்கு கூட ரன்வீர் சிங் மேடையில் ஆடினார். இதனைப் பார்க்கும் போது இருவருமே சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர்கள் என ரோஹித் ஷெட்டி புகழ்ந்தார். சர்க்கஸ் படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதேசமயம் ரோஹித் ஷெட்டில் விஜய் மற்றும் ரன்வீரை வைத்து படம் எடுத்தால் என்ன மாதிரியான கதையாக அப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.