சென்னையை சேர்ந்தவர் இளஞ்செழியன் இவர் கடல் சார் படிப்பில் முது நிலை பட்டம் படித்துள்ளார். ஒன்றை ஒன்று உட்கொண்டு வளர்ச்சி அடையும் கடல் வாழ் உயிரினங்களை வளர்க்க ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அருகே புளியந்துறை கிராமத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பை வாங்கி முதலில் இறால் குட்டைகளை நிறுவினார். அதில் இறால் குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தார். அப்பொழுது இறால்கலுக்கு வரும் நோயால் அதிக அளவு இறால்கள் அழிந்ததாலும் இதனால் உண்டாகும் தீமைகளை கருத்தில் கொண்டும் மாற்றுத் தொழில் செய்ய முடிவு செய்த போது அலையாத்தி காடுகளுக்கு நடுவே கொடுவா மீன் மற்றும் கல் நண்டு வளர்க்க முடிவு செய்தார். 




இதற்காக தனது 15 ஏக்கர் நிலத்தில் 1 ஏக்கர் நிலத்தை தானியங்கி முறையில் சுழற்ச்சியாக தண்ணீர் வெளியேறி உள்ளே வரும் படி வடிவமைத்து அதில் இயற்கை பேரிடர் காலங்களில் பாதுகாப்பு அரனாக விளங்கும் அலையத்தி காடுகளை வளர்க்க முடிவு செய்தார். இதற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு 1800 அலையத்தி செடிகளை வாங்கி வளர்த்தார். செடிகள் வளரும் வரை மற்றொருபுறம் திறந்தவெளியில் குட்டைகள் அமைத்து கொடுவா மீன் கல் நண்டு வளர்த்து வந்தார். திறந்தவெளியில் தனது உயிரினத்தையே ஒன்றை ஒன்று உட்கொண்டு வளர்ச்சி அடையும் கல் நண்டு மற்றும் கொடுவா மீன்கள் அதிகளவு வளர்ச்சி அடையாமல் உற்பத்தி பாதித்து குறைந்து காணப்பட்டது.


Nigeria boat Accident : ஆற்றில் கவிழ்ந்த படகு..! 76 பேர் உயிரிழப்பு..! நைஜீரியாவில் சோகம்...




அதனைத் தொடர்ந்து தான் உருவாக்கிய அலைத்திக்காடுகளுக்கு நடுவே கல் நண்டையும், கொடுவா மீனையும் வளர்க்க தொடங்கினார்.  அலையத்தி காடுகளின் வேர்களுக்கு இடையே கொடுவா மீன் மற்றும் கல் நண்டு வளர்ச்சி, உற்பத்தி சதவீதம் அதிகரித்தது.  ஆண்டிற்கு ஒருமுறை மீன்கள், கல் நண்டுகள் பெரிதானதும் அவற்றைப் பிடித்து மொத்த வியாபாரத்திற்கும் சில்லறை வியாபாரத்திற்கும் விற்பனை செய்து  வருகிறார்.  


Bigg Boss 6 Tamil : டாஸ்க் மூலம் பஞ்சாயத்தை கூட்டிய பிக்பாஸ்...முதல் நாளே சிக்கப்போகும் அந்த 4 பேர் யார்?




இயற்கையான முறையில் இந்தியாவிலேயே முதன்முறையாக அலைத்திக்காடுகளை உருவாக்கி அதில் கொடுவா மீன் மற்றும் கல் நண்டு வளர்ப்பில் ஈடுபட்டு அதிக லாபம் ஈட்டி வரும் அவர் இது போன்ற முறையை கடலோரப் பகுதிகளில் பின் பற்ற அரசு மானியம் வழங்கினால் மற்றவர்கள் இந்த முறையை பின்பற்ற முன்வருவார்கள் எனவும், எதிர்காலங்களில் வரும் சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை காக்க முடியும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவே இந்த முறையை அரசு ஊக்குவிக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Mulayam Singh Yadav Died : "முலாயம்சிங் யாதவ் தனித்துவமான ஆளுமை" - பிரதமர் மோடி இரங்கல்!