பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியுள்ள அங்கு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முதல் டாஸ்க் போட்டியாளர்களிடையே பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்று தொடங்கியது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ் என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான். முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ரியோ, ரம்யா பாண்டியன், நிரூப், பிரியங்கா உள்ளிட்ட பலரும் ஆட்டம் ஆடி வரவேற்றனர்.
அதன்படி நேற்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6ன் முதல் டாஸ்க் ஆக “கப்பு முக்கியம் பிகிலு” கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஜனனி அனைவருக்கும் படித்து காட்டினார்.
மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று உங்களோடு 19 பேரும் சேர்ந்து ஓட ஆரம்பிச்சிருப்பாங்க. அதனால போட்டி எவ்வளவு கடினம்ன்னு தெரிஞ்சிருக்கும். நீங்க இந்த வீட்டுக்கு வந்து சில மணி நேரம் ஆகிடுச்சி. சக போட்டியாளரை பத்தி உங்களுக்கு நல்லா தெரியாம இருக்கலாம். அவர்கள் மீதான முதல் பார்வை மற்றும் எண்ணம் உருவான அளவுக்கு எல்லாரும் எடை போட்டு வச்சிருப்பீங்க. அதனால போட்டியாளர்கள் வந்து உங்களை மிகவும் குறைவாக கவர்ந்த 2 பேரை காரணத்தை சொல்ல வேண்டும். இறுதியாக குறைவாக ஓட்டுகள் வாங்கிய 4 பேர் வீட்டின் வெளியே தான் தங்க வேண்டும். டாஸ்க் மற்றும் வீட்டு வேலைகள் செய்யும் நேரம் தவிர்த்து கார்டன் ஏரியாவில் தான் இருக்க வேண்டும். வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட, தூங்க அனுமதி இல்லை.
இந்த 4 பேரும் அடுத்த வாரம் நடக்கவுள்ள நேரடி வெளியேற்றம் செய்யப்படக்கூடிய நாமினேஷன் பட்டியலில் இடம் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது.