மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் அமைந்துள்ளது அனம்பரா மாகாணம். இந்த மாகாணத்தில் அமைந்துளளது ஓக்பாரு. இந்த பகுதியில் நதி ஒன்று அமைந்துள்ளது. இந்த நதி வழியாக மக்கள் படகுகளில் பயணிப்பது வழக்கம். இந்த நிலையில், நேற்று அந்த நதியில் வழக்கத்தை விட அதிகமான அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.




அப்போது, பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றது. அந்த படகில் 85 பயணிகள் சென்றுள்ளனர். தண்ணீர் பெருக்கெடுத்து அதிகளவு ஓடிக்கொண்டிருந்த இந்த நதியில் மேலும் தண்ணீரின் அளவு அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், படகு தடுமாறியது.














வெள்ளத்தில் சிக்கி தடுமாறிய படகு நடு ஆற்றில் கவிழ்ந்தது. படகில் இருந்த பலருக்கும் நீச்சல் தெரியாது. ஆற்றில் கவிழ்ந்த படகில் இருந்தவர்களில் 76 பேர் பரிதாபமாக இதுவரை உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் மாயமாகியுள்ளனர். இவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கடந்த வெள்ளிக்கிழமை சம்பவம் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் அந்த நாடு முழுவதும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்த நாட்ட அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்துள்ளார். மாயமானவர்களை தேடுவதற்கான பணிகளை துரிதப்படுத்தவும் அதிபர் முகமது புகாரி உத்தரவிட்டுள்ளார்.




மேலும், அதிபர் புகாரி தனது இரங்கல் செய்தியில், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைவும், அனைவரின் பாதுகாப்புக்காவும், இந்த துயரமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்கும் அதிகாரிகளுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க : ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஆதரவளித்து அரசு தொலைக்காட்சியை ஹேக் செய்த மர்ம நபர்கள்