இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் தங்கள் இன்னுயிரை நீத்தனர். இந்த விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்களது மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் அவர்களின் புகைப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் பங்கேற்று, உயிரிழந்த ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் குன்னூரில் ஏற்பட்ட விபத்தில் நாட்டின் முதல்நிலை அதிகாரியில் இருந்து கடைநிலை காவலர் வரை உயிரிழந்துள்ளனர்.
விபத்து என்பது எந்த நிலையில் உள்ளவர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான முதலுதவியை அளிக்க வேண்டும் என்பதை காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் அறிந்திருக்க வேண்டும். தீக்காயம் அடைந்தவர்கள், விபத்தில் ரத்த காயம் ஏற்பட்டவர்கள், மூச்சுப் பிரச்னை ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காவல்துறையினர், பொதுமக்கள், வணிகர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கு பர்ஸ்ட் ரெஸ்பான்டன்ட் டிரைனிங் வழங்கப்பட உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
வீட்டின் கழிப்பறையில் ஆணுறை கவர்.. காதலியை கொடூரமாக கொல்ல முயற்சித்த காதலன்.. பயங்கர பரபரப்பு..
இந்த பயிற்சியில் அனைவரும் பங்கேற்று புரிந்துகொண்டு, விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முதலுதவியை வழங்க வேண்டும் என்றார். தொடர்ந்து காவல்துறையினர் அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌனமாக நின்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் கலந்துகொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.