மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் அப்பகுதியில் உள்ள மூங்கில் காட்டில் பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் அனாதையாக ஒரு ஆண் குழந்தை கிடந்துள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு திருமயிலாடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் மனோஜ் என்பவர் குழந்தை கிடந்த மூங்கில் காட்டில் சென்று பார்த்துள்ளார். அப்போது பிறந்து சில மணி நேரம் ஆனா தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ந்து போன மனோஜ், குழந்தையை அந்த மூங்கில் காட்டில் இருந்து பாதுகாப்பாக எடுத்து சென்று சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
Ashwin Troll Meme: 40 கதை கேட்டு தூங்கினேன் மீம்ஸ்.. அஷ்வினை கலாய்த்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்...!
தொடர்ந்து குழந்தைக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அமுதா ராணி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றார்.
இந்தக் குழந்தை யாருடையது? எதற்காக இங்கு வந்து போட்டுள்ளனர்? என்ற பல்வேறு கோணத்தில் இதுகுறித்து தீவிரமாக ஆணைக்காரன் சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் இந்த குழந்தையை தத்து எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
மேலும் இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், குழந்தைகள் பலர் இதுபோன்று ஆதரவற்ற நிலையில் வீசி செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும், பல பெண்கள் தவறான வழியில் சென்று கருவுற்று பெற்றெடுக்கும் குழந்தைகளை பின்பு என்ன செய்வதென்று தெரியாமல் பிறந்த குழந்தைகளை இதுபோன்று வீதிகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் என வீசி சென்று அக்குழந்தைகளை ஆதரவற்றவர்களாக மாற்றுகின்றன. இது போன்ற நிகழ்வுகள் தொடராமல் இருக்க அரசு ஏதேனும் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு அளிக்க வேண்டும் அமைச்சர் பொன்முடி